இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடவுளின் பிரதிநிதியாக நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் திகழக்கூடியவர் தாய். அதனால்தான் ஆயிரமாயிரம் தெய்வங்களை விட அம்மா என்பவர் உயர்ந்த தெய்வமாகிறார்.
ஒப்பிட முடியாத தியாகம், உயர்ந்த அன்பு, சகிப்புத்தன்மை, அரவணைப்பு, பாசம், அக்கறை, கண்டிப்பு என உயர் குணங்களின் தொகுப்பாக திகழ்வது தாய்மை. அத்தகைய தாய்மையின் வடிவமாக, தமிழ் கூறும் நல்லுலகில் அம்மா என்று கோடிக்கணக்கானோரால் கொண்டாடப்படுகிற தெய்வமாக இருப்பவர் நம்முடைய புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதா). அம்மா என்றவுடன் அவரது முகம் மனக்கண்ணில் தோன்றும் அளவுக்கு மக்கள் மனங்களில் வாழ்பவர்.
அந்தத் தாயை இந்நாளில் நினைவு கூர்ந்து அவர்களின் வழியில் பயணிக்கும் நாம், தாய்மையை வணங்கிக் கொண்டாடுவோம். தாய்மை என்னும் உன்னத உணர்வோடு நம்மை அரவணைக்கிற, அருகிலிருந்து ஆசி வழங்குகிற அத்தனை பேரையும் வணங்குவோம். வாழ்த்துகளைப் பெற்று மகிழ்வோம்' எனத் தெரிவித்துள்ளார்.