சென்னை: சூளைமேடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சகுந்தலா (89). இவர் திருத்தணி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரனின் மாமியார் ஆவார். இவர் தனது மகளுடன் சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் பூஜை அறையில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விளக்கில் இருந்து தீ சகுந்தலா கட்டியிருந்த காட்டன் புடவை மீது பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதனால் சகுந்தலாவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த வேலையாள்கள் மற்றும் அவரது மகள் உடனடியாக வந்து பெட்ஷீட் மூலம் தீயை அணைத்தனர். இதையடுத்து ஆட்டோவில் ஏற்றி கோடம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அங்கு மருத்துவர்கள் இல்லாததால் உடனடியாக வானகரத்திலுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
அங்கு 90 விழுக்காடு தீக்காய பாதிப்புடன் சகுந்தலா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜூலை 17) அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து சூளைமேடு காவல் துறையினர் விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணம் - பள்ளிச்செயலர் வெளியிட்ட வீடியோ!