ETV Bharat / state

நில மோசடி - மகன் மீது தாய் புகார் - chennai latest news

நில மோசடியில் ஈடுபட்ட மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தாய் புகார் அளித்துள்ளார்.

Land grabbing  chennai Land grabbing  பெற்ற மகன் மீது தாய் புகார்  சென்னை நில மோசடி  நில மோசடி காரணமாக மகன் மீது தாய் வழக்கு  நில மோசடி  சென்னையில் நில மோசடி காரணமாக மகன் மீது தாய் வழக்கு  குற்றச் செய்திகள்  நில அபகரிப்பு  land fraud  Mother filed case on son over land fraud  Mother filed case on son over land fraud in chennai  chennai news  chennai latest news  crime news
நில மோசடி
author img

By

Published : Jul 14, 2021, 7:54 AM IST

சென்னை: நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் வள்ளிக்கண்ணு.(66) இவருக்கு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சுப்பிரமணியன் கடந்த 2011ம் ஆண்டு காலமானார்.

சுப்பிரமணியன் பெயரில், திருவேற்காட்டில் இருக்கும் ரூ.80 லட்சம் மதிப்பிலான நிலம் உள்ளது. இதன் மீது வாரிசுகள் அனைவருக்கும் சம பங்கு உள்ளது. ஆனால் முதல் மகன் ராஜேந்திரன் அந்த நிலத்தின் பத்திரத்தை திருடிச் சென்று, நிலத்தை அபகரிக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து, தனது நிலத்தை அபகரிக்க முயல்வதாக தாய் வள்ளிக்கண்ணு மகன் ராஜேந்திரன் மீது புகார் அளித்துள்ளார். குறிப்பாக தாய் வள்ளிக்கண்ணு இறந்துவிட்டதாக கூறி தான் அவருக்கு ஒரே மகன் என போலியாக பத்திரம் தயாரித்து மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.

முன்னதாக 2018 ஆம் ஆண்டு நிலத்தை மோசடி செய்து அபகரிக்க முயலும் போது தடுத்து நிறுத்தியதாகவும், தற்போது மீண்டும் அதே நிலத்தை மோசடி செய்து ராஜேந்திரன் விற்க முயல்வதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வள்ளிக்கண்ணு புகார் அளித்துள்ளார்.

இப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு பிரிவு காவல் துறையினர் வள்ளிக்கண்ணு, அவரது மகள் பொன்னம்மாள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: விடுபட்ட கேங்மேன் போராட்டம் எதிரொலி: மின் துறை அமைச்சர் நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.