சென்னை சாலிக்கிராமம் தசரதபுரம், ஸ்ரீராமுலு தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (52). இவர் தனது வீட்டில் தாய் தேவிகா(82) மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். பாஸ்கர் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்தார். தாய் மீது மகன் பாஸ்கர் அதிக பாசத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில், பாஸ்கரனின் தாயார் தேவிகா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மரணமடைந்தார்.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல், மன வருத்தத்தில் இருந்த பாஸ்கர் சுமார் 7.30 மணியளவில் நண்பர்களுடன் டீ குடிக்கச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு அவரும் இறந்துவிட்டார். இதையடுத்து, தாய்- மகன் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.