ETV Bharat / state

டெங்கு கொசுக்களைக் கொல்லும் புதிய மெஷின்..! - கொசுக்களைக் கொல்லும் புதிய மெஷின்

சென்னை: டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய் கொசுக்களால் ஏற்படும் நிலையில், கொசுக்களைக் கொல்லும் மெஷினை ஓய்வுபெற்ற அரசு அலுவலர் ஆறுமுகம் கண்டுபிடித்துள்ளார்.

mosquito-killer-machine
author img

By

Published : Oct 31, 2019, 9:59 PM IST

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது கொசுக்கள்தான். ஏனென்றால் அதன் மூலமாகவே டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல்கள் ஏற்பட்டு சுலபத்தில் மனிதர்கள் வயது வரம்புகள் இல்லாமல் உயிரிழந்து வருகின்றனர். கொசுக்களை ஒழிக்க பொது சுகாதரத் துறை, மருத்துவத் துறை, உள்ளாட்சித் துறை என பல்வேறு துறைகளும் ஏராளமான முயற்சிகள் மேற்கொண்டாலும், கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கின்றதே தவிர குறைந்தபாடில்லை.

இந்நிலையில் கொசுக்களை வீடுகளிலும், பொது இடங்களிலும் ஒழித்துக்கட்ட முடியும் என சிறிய அளவிலான ஒரு தொழில்நுட்பத்தை ஓசூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அலுவலர் ஆறுமுகம் செயல்படுத்தியுள்ளார்.

டெங்கு கொசுக்களைக் கொல்லும் புதிய மெஷின்

கொசு மட்டை எனப்படும் மின்சார கொசுபேட் பயன்படுத்தி பெரும்பாலான வீடுகளில் கொசுக்களை உடனுக்குடன் கொல்வதை நாம் பார்க்க முடியும். அதனை யாரேனும் பயன்படுத்திக்கொண்டே இருந்தால் மட்டுமே அதில் கொசுக்களை கொல்ல முடியும் மற்ற நேரத்தில் வரும் கொசுக்களை யாரும் ஏதும் செய்ய முடியாத நிலைதான் உள்ளது.

ஆனால், ஆறுமுகத்தின் தொழில்நுட்பத்தில் மின்சாரக் கொசுபேட் தானாகவே கொசுக்களை கொன்று குவிக்கிறது. மின் கொசு மட்டையில் எப்போதுமே மின்சாரம் இருப்பதுபோல் உருவாக்கி அதன் எதிர் திசையில் சிறிய அளவிலான காற்றாடியை ( பேன்) இணைத்துள்ளார். மேலும் கொசு மட்டைக்கு முன்புறமாக கொசுக்களை அதிகம் ஈர்க்கும் சிறிய அளவில் மங்கலாக எரியும் நீளம் மற்றும் பச்சை நிற பல்புகளை எரிய விடுகிறார். அந்த ஒளியின் தன்மையால் கொசுக்கள் ஈர்க்கப்பட்டு இரவு முழுமையாக தன்னிச்சையாக கொசுக்களை கொல்ல முடியும் என செயல்படுத்தியும் காட்டுகிறார்.

மேலும் இந்த வழிமுறையை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களின் வீடுகளில் உள்ள கொசுக்களை எளிதில் கொல்ல முடியும் என்பதால், கொசுக்கள் மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெரிய அளவிலான இயந்திரங்களை மக்கள் கூடும் பொது இடங்கள், கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வைக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஐந்தாம் வகுப்பு சிறுமியின் உயிரைப் பறித்த டெங்கு!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 31.10.19

வீடுகளில் இனி கொசுக்கள் தானாக செத்து மடியும்; புதிய மற்றும் எளிய கொசுக் கொலை இயந்திரம் தயார்...

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலக இருப்பது கொசுக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அதன் மூலமாகவே டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல்கள் ஏற்பட்டு சுலபத்தில் மனிதர்கள் வயது வரம்புகள் இல்லாமல் மாய்ந்து வருகின்றனர். கொசுக்களை ஒழிக்க பொதுசுகாதரத்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை என பல்வேறு துறைகளும் ஏராளமான முயற்கள் மேற்கொண்டாலும் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கின்றதே தவிர குறைந்தபாடில்லை..

இந்நிலையில் கொசுக்களை வீடுகளிலும் பொது இடங்களிலும் ஒழித்துக்கட்ட முடியும் என சிறிய அளவிலான ஒரு தொழில்நுட்பத்தை செயல்படுத்திக் காட்டுகிறார் ஓசூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செண்ட் ரல் எக்சர்சைஸ் அதிகாரி ஆறுமுகம்..

அதாவது கொசு மட்டை எனப்படும் மின்சார கொசுபேட் பயன்படுத்தி பெரும்பாலான வீடுகளில் கொசுக்களை உடனுக்குடன் கொல்வதை நாம் பார்க்க முடியும்.. அதனை யாரேனும் பயன்படுத்திக்கொண்டே இருந்தால் மட்டுமே அதில் கொசுக்களை கொல்ல முடியும் மற்ற நேரத்தில் வரும் கொசுக்களை யாரும் ஏதும் செய்ய முடியாத நிலைதான் உள்ளது. ஆனால், ஆறுமுகம் தனது தொழில்நுட்பத்தில் மின்சாரக் கொசுமட்டை தானாகவே கொசுக்களை கொன்று குவிக்கிறது. மின் கொசு மட்டையில் எப்போதுமே மின்சாரம் இருப்பதுபோல் உருவாக்கி அதன் எதிர் திசையில் சிறிய அளவிலான காற்றாடி ( பேன்) இணைத்துள்ளார். மேலும் கொசு மட்டைக்கு முன்புறமாக கொசுக்களை அதிகம் ஈர்க்கும் சிரிய அளவில் மங்கலாக எரியும் நீளம் மற்றும் பச்சை நிற பல்புகளை எரிய விடுகிறார். அந்த ஒலியின் தன்மையால் கொசுக்கள் ஈர்க்கப்பட்டு இரவு முழுமையாக தன்னிச்சையாக கொசுக்களை கொல்ல முடியும் என செயல்படுத்தியும் காட்டுகிறார் ஆறுமுகம்..

மேலும் இந்த வழிமுறையை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களின் வீடுகளில் உள்ள கொசுக்களை எளிதில் கொல்ல முடியும் என்பதால் கொசுக்கள் மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கிறார்.. இதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெரிய அளவிலான இயந்திரங்களை மக்கள் கூடும் பொது இடங்கள், கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வைக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்..

கொசுக்களை கண்டாலே பீதியடையும் இந்தக்காலகட்டத்தில் ஆறுமுகத்தின் இந்த யோசனை சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்றே சொல்லலாம்..

இ.டி.வி பாரத் செய்திகளுக்காக
ச.சிந்தலைபெருமாள்..

tn_che_03_special_story_of_mosquito_killer_machine_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.