ETV Bharat / state

400 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல்!

சென்னை பெருநகரில் கடந்த 7 நாள்களில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்தது தொடர்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

400 கிலோக்களுக்கு மேல் குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : 25 பேர் கைது

author img

By

Published : Jan 23, 2022, 10:45 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் புகையிலை பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை" (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதன் பேரில் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குட்கா புகையிலை பொருள்கள் பறிமுதல்

இதன் தொடர்ச்சியாக கடந்த 7 நாள்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில், 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 488.4 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலைப் பொருள்கள், 3.7 கிலோ மாவா, 4 செல்போன்கள், ரொக்கம் ரூ.17,550 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகபட்சமாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சிவகுமார் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 463 கிலோ எடை கொண்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொலை - காவல்துறையினர் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.