ETV Bharat / state

தமிழ்நாட்டில் அதிக மழை பெய்துள்ளது- சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுவையில் செப்டம்பர் மாதத்தில் இயல்பைவிட அதிகமான மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

More rain this year in tamilnadu chennai weather research center announced
author img

By

Published : Sep 27, 2019, 4:38 PM IST

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்துள்ளது.

கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பதிவான மழையின் அளவு 38செ.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான மழையின் அளவு 33செ.மீ. இயல்பான அளவைவிட16 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை பதிவான மழையின் அளவு 59 செ.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 42 செ.மீ. இயல்பைவிட 39 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிக மழை வானிலை மையம் அறிவிப்பு

குறிப்பாக செப்டம்பர் மாதம் இயல்பைவிட அதிக மழை பதிவாகியுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இன்றுவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பதிவான மழையின் அளவு 16 செ.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 10 செ.மீ ஆகும்.

தெற்கு ஆசிய நாடுகளுக்கான வட கிழக்கு பருவ மழைக்கான முன் அறிவிப்பின்படி இந்த ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு மழையின் அளவு இயல்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்படுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

Intro:Body:தமிழகம் மற்றும் புதுவையில் செப்டம்பர் மாதத்தில் இயல்பை விட அதிகமான மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பாலச்சந்தர் பேசுகையில்,
கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்துள்ளது.

கடந்த ஜூன் 1 முதல் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 38 செ.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் மழையின் இயல்பு அளவு 33 செ.மீ ஆகும். இது இயல்பை விட 16 சதவீதம் அதிகம் ஆகும்.

சென்னையை பொறுத்தவரை கடந்த ஜூன் 1 முதல் இன்று வரை பதிவான மழையின் அளவு 59 செ.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 42 செ.மீ. இது இயல்பை விட 39 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.

இந்த ஆண்டு குறிப்பாக செப்டம்பர் மாதம் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகியுள்ளது. செப்டம்பர் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 16 செ.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 10 செ.மீ ஆகும்.

சென்னையை பொறுத்தவரை செப்டம்பர் மாதம் இயல்பை விட 92 சதவீதம் அதிகமாக மழையின் அளவு 19 செ.மீ என தெரிவித்தார்.

தெற்கு ஆசிய நாடுகளுக்கான வட கிழக்கு பருவ மழைக்கான முன் அறிவிப்பின் படி இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுவைக்கு இயல்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.