தமிழ் மாநில காங்கிரஸின் நிறுவனரான ஜி.கே.மூப்பனாரின் 18வது நினைவு தினத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கலந்துகொண்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், திமுக கொள்கை பரப்பு செயலாளராக தங்க. தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் தரம் தாழ்ந்துள்ள நிலை. முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் திட்டமிடப்பட்ட ஒன்று. இது குறித்து தெளிவான விளக்கங்கள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டன.
மேலும், பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் அனைத்து துறைகளிலும் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையிலே மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள் உள்ளன, என்றார்.