சென்னை: இந்தியாவிலுள்ள பல முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் திகழ்கிறது.
இதன் மேற்கூரை முழுவதும் சூரிய மின் ஒளி தகடுகள் பதிக்கப்பட்டு, பகல் பொழுது முழுவதும் அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரமே ரயில் நிலையம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
பாராட்டிய மோடி
இத்தகவலை ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதன்மூலம் ரயில் போக்குவரத்து பசுமையானதாக மாற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர், “சூரிய சக்திக்கான பாதையை சென்ட்ரல் ரயில் நிலையம் வகுத்து தந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ரயில் நிலைய வளாகத்துக்குள் திறந்த வெளி கழிவுநீர் கால்வாய் செல்வதாகவும், இது சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் எனவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா கால தடையும் தாண்டி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி...