வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்மவுரியா நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று நடந்த வேட்புமனு பரிசீலனையின்போது மவுரியாவின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
இதையடுத்து மவுரியா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
வடசென்னை தொகுதியில் போட்டியிடுவதற்கு எனது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வடசென்னை தொகுதி மக்களின் பிரச்னைகள் என்னவென்று எனக்கு நன்கு தெரியும்.
அவர்களின் பிரச்னையை தீர்த்து வடசென்னை தொகுதியை எப்படி மேம்படுத்தவுள்ளேன் என எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பேன்.
எங்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எனக்கு ஆதரவாக வடசென்னை தொகுதியில் நாளை மறுநாள் பரப்புரை செய்கிறார். மேலும் மக்களும் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லவர்கள் வர வேண்டும் என விரும்புகிறார்கள்; வடசென்னை மக்கள் என்னிடம் அன்பு காட்டுகிறார்கள்.
தேர்தலில் வெற்றிபெறச் செய்தால் நான் அவர்களுக்கு அன்புடன் சேர்த்து தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களையும் காணிக்கையாகதிருப்பி அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.