ETV Bharat / state

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய கமல்

சென்னை: மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின், நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி நடிகர் கமல் ஹாசன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ரசிகரின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய கமல்

author img

By

Published : Jun 23, 2021, 1:53 PM IST

நடிகர் கமல் ஹாசனின் ரசிகர் சகோத் ராமு. கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், தனது குடும்பத்துடன் தற்போது கனடாவில் வசித்துவருகிறார்.

நீண்ட நாள் ஆசை

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சகோத்திற்கு, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, மாதவன் ஆகியோரைச் சந்திக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இது குறித்து தன் குடும்பத்தினருடன் அடிக்கடி தெரிவித்துள்ளார். கமல் மீது கொண்ட ஈர்ப்பால், தனது இரண்டாவது மகனை விருமாண்டி என்றே செல்லமாக அழைக்கிறார் சாகோத்.

சகோத் ஆசையை நிறைவேற்றிய கமல்

தற்போது புற்றுநோயின் மூன்றாம் நிலையில் உள்ளார் சகோத். இந்நிலையில், அவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் நடிகர் கமல் ஹாசனுடன் பேசவைக்க, சகோத்தின் குடும்பம் முயற்சி செய்தது.

பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு கமல் ஹாசனுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவே, சாகோத் குடும்பம் சொல்லொண்ணா மகிழ்ச்சி அடைந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசனை, காணொலி அழைப்பில் கண்ட சாகோத் உணர்ச்சி பெருக்கில் மகிழ்ச்சி அடைந்தார்.

ரசிகரின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய கமல்
ரசிகரின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய கமல்

காணொலி அழைப்பில் பேசிய கமல்

சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக தனது ரசிகருடன் பேசிய கமல் ஹாசன், தன்னுடைய திரை அனுபவங்களுடன், அரசியல் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய கமல்

சகோத் தனக்கு வந்த நோயை எதிர்த்துப் போராட ஊக்கமளிக்கும், தன்னம்பிக்கை வார்த்தைகளையும் நடிகர் கமல் கூறியுள்ளார். கமல் ஹாசனின் இந்தக் கனிவான உரையாடல் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: மருத்துவக்கல்வி: இலங்கைத் தமிழர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.