மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார். அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்படி மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும், மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியிலும், இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளார்.