அரசு கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், ரத்தின சபாபதி உள்ளிட்ட மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விளக்கம் கேட்டு மூவருக்கும் ஏப். 29ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சம்பந்தப்பட்ட 3 நபர்களிடமும் மே 1ஆம் தேதி நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற நிலையில், ரத்தின சபாபதி மற்றும் கலைசெல்வன் ஆகிய இருவரும் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த நோட்டீஸ்க்கு இடைக்கால தடை வாங்கினர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு தலைமை செயலகத்தில் சபாநாயகரின் செயலாளர் சீனிவாசனை சந்தித்து, சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க ஒரு வாரகால அவகாசம்கோரி மனு அளித்துள்ளார். அதில், நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி கூடுதல் அவகாசத்தை அவர் கோரியுள்ளார்.
சபாநாயகரிடம் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ பிரபு மனு!
சென்னை: தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ்க்கு விளக்கமளிக்க கால அவகாசம்கோரி அதிருப்தி எம்எல்ஏ பிரபு, சபாநாயகரின் செயலாளரிடம் இன்று மனு அளித்துள்ளார்.