ETV Bharat / state

'சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. குறித்து பேச வாய்ப்பளிக்கவில்லை' - எம்எல்ஏ அபூபக்கர் வெளிநடப்பு

சென்னை: சட்டப்பேரவையில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். குறித்து பேச வாய்ப்பளிக்காததால் சட்டப்பேரவை உறுப்பினர் அபூபக்கர் வெளிநடப்புச் செய்தார்.

எம்எல்ஏ அபூபக்கர்
எம்எல்ஏ அபூபக்கர்
author img

By

Published : Mar 16, 2020, 2:33 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

அந்தச் சமயம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபூபக்கர் எழுந்து, என்.பி.ஆர். குறித்து பேச வாய்ப்பு வழங்குமாறு கேட்டார். அதற்கு அவைத்தலைவர் மறுக்கவே அபூபக்கர் வெளிநடப்புச் செய்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் அபூபக்கர் பேசிய காணொலி

தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபூபக்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தலைமைச் செயலர் தலைமையில் இஸ்லாமிய சமுதாய தலைவர்களை அழைத்துப் பேசியது குறித்து பேச வாய்ப்பு கேட்டேன். அவைத்தலைவர் வாய்ப்பினை மறுத்தார்.

வருவாய்த் துறை அமைச்சர் ஏற்கனவே சொன்னதையே சொன்னார். என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து எதுவும் தெரிவிக்காததால் வெளிநடப்புச் செய்தேன்” என்றார்.

இதையும் படிங்க: 'சி.ஏ.ஏ. குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்' - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.