ETV Bharat / state

Coromandel Express accident: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்க அனுசரிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு, இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

One day of mourning in TN today
தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்க அனுசரிப்பு
author img

By

Published : Jun 3, 2023, 9:39 AM IST

சென்னை: ஒடிசா மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் மோதிக் கொண்டதில் சுமார் 15க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 238 எனவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் மீட்புக்குழு தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவத்தால் நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. மேலும், இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்த காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் மீட்புப்பணி நிகழும் இடத்தில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். மேலும் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்பட்டு, அரசு விழாக்களையும் அவர் ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று (ஜூன் 3) விமரிசையாக கொண்டாடவிருந்தது. ஆனால், அந்த விழாக்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியானது. இதனைத் தொடர்ந்து, ரயில் விபத்தின் காரணமாக இன்று நடைபெற இருந்த அனைத்து அரசியல் நிகழ்ச்சியும் ஒரு நாள் ரத்து செய்யப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார்.

  • ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (3.6.2023) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார். pic.twitter.com/sHcmhuMHSd

    — CMOTamilNadu (@CMOTamilnadu) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல தமிழ்நாடு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும்" என முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Coromandel Express: கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் ரத்து - திமுக அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.