ETV Bharat / state

'கல்வி ஒன்றே பிரிக்க முடியாத சொத்து' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சி பொங்க பேச்சு! - at Tamil Kanavu 100th Tamil Heritage

'கல்வி' ஒன்றே மாணவர்களிடம் இருந்து 'யாராலும் பிரிக்க முடியாத சொத்து', அதை சேர்த்து விட்டால் பிற சொத்துக்கள் எல்லாம் தானாக வந்து சேரும் என தமிழ் கனவு 100 ஆவது தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 24, 2023, 11:01 PM IST

சென்னை: 'கல்வி' தான் உங்களிடம் இருந்து 'யாராலும் பறிக்க முடியாத சொத்து' அந்த சொத்தைச் சேகரித்துவிட்டால் மற்ற சொத்துகள் தானாக வந்து சேர்ந்துவிடும்! எனவே பள்ளிக் காலத்தில், கல்லூரிக் காலத்தில் படிப்பில் இருந்து கவனச் சிதறல்கள் இருக்கக்கூடாது. எந்த சூழலிலும் தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகிவிடாதீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு 100 ஆவது தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.4.2023) கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,

வள்ளுவர் சொன்ன சமத்துவத்தை நோக்கியே திராவிட இயக்கம் உழைக்கிறது!
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்" - என்பதுதான் தமிழரின் அறநெறி!

"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறி முறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி" – என்பதுதான் தமிழரின் அறநெறி!

"சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே. சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர் அலைந்து அலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே!" - என்பதுதான் தமிழரின் அறநெறி!

சங்க காலத் தமிழர் வாழ்க்கை என்பது அறம் சார்ந்த வாழ்க்கை! இடைக்காலத்தில் புகுந்த சனாதனம், இந்த அறத்தைக் கொன்றது. சமய நம்பிக்கைகளுக்குள் சனாதனம் நுழைந்ததும், உழைப்புக்குள் நிலவுடைமை நுழைந்ததும்தான் தமிழ்ச் சமுதாயத்தில் சாதிய ஏற்றத்தாழ்வையும், பொருளாதார ஏற்றத் தாழ்வையும் விதைத்தது.

தமிழ்க் கனவு 100-வது தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை பார்வையிட்ட முதலமைச்சர்

இதனை எதிர்கொள்வதற்கான போராட்டம்தான் காலம் காலமாக நடந்து வருகிறது. திருவள்ளுவர் - வள்ளலார் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் தந்தை பெரியார் வரையிலான சமூகசீர்திருத்த தலைவர்களின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறை அறிய வேண்டும். எப்படி இருந்த நாம் இப்போது இப்படி வளர்ந்திருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கோயிலுக்குள் வர முடியாது, சாலைகளில் நடக்க முடியாது, படிக்கக் கூடாது, எதிரே வரக்கூடாது போன்ற தடைகள் எல்லாம் இப்போது இல்லை என்றால், எப்படி இல்லாமல் ஒழிக்கப்பட்டது? அதுதான் நமது சமூகச் சீர்திருத்தத் தலைவர்களுடைய வெற்றி!

தோள் சீலைப் போராட்டத்துக்கு 200-ஆவது ஆண்டு விழா கொண்டாடினோம். வைக்கம் போராட்டத்துக்கு இது நூற்றாண்டு விழா ஆண்டு விழாவும் கொண்டாட உள்ளோம். இந்த வரலாறுகளைப் படியுங்கள்! ஒருகாலத்தில் சமூக வாசல் அடைக்கப்பட்டுக் கிடந்தது. அதனை நீதிக்கட்சி ஆட்சி திறந்துவிட்டது என்று கூறினார்.

பள்ளிக்கூடங்கள் மூடி இருந்தது. பெருந்தலைவர் காமராசர் திறந்து வைத்தார். கல்லூரி வாசல்களை பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும் திறந்து விட்டார்கள். நம்முடைய அரசு உயர்கல்வியை உருவாக்கித் தரும் அரசு. அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து விதமான தகுதிகளையும் உருவாக்கித் தரும் அரசு. நான் முதலமைச்சராக இருந்து மட்டுமல்ல, ஒரு தந்தையாக இருந்து திட்டங்களைத் தீட்டித் தருகிறேன்.

தமிழ்நாட்டில் ஒரு கல்விப் புரட்சியே நடந்து கொண்டு இருக்கிறது. பள்ளிக் கல்வியாக இருந்தாலும், கல்லூரிக் கல்வியாக இருந்தாலும், பல்கலைக் கல்வியாக இருந்தாலும், அது உங்களை கல்வித் தகுதி பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்றார். ஆனால், அதனையும் தாண்டிய தனித்திறமைகள் மிகவும் அவசியம் என மறந்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். எல்லோருமே அதிக மதிப்பெண் பெறுகிறீர்கள். ஆனால், அதிலும் தனித்திறமை கொண்டவர்களாக இருக்கக்கூடியவர்களுக்குத்தான் நல்ல வேலை கிடைக்கிறது எனக் கூறிய அவர், சுயமாக சிந்திப்பதும், சிந்தித்ததை அடுத்தவருக்கு வெளிப்படுத்துவதும் அதைச் சொல்வதும், அதை எழுதிக் காட்டுவதும் மிக முக்கியமான தனித்திறமைகள் எனவும் அறிவின் கூர்மை, அறிவாற்றல் என்பது இதுதான்! என்றும் எடுத்துரைத்தார்.

இப்படி தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் திகழ வேண்டும் என்பதற்காகத்தான் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் நாள் எனது பிறந்தநாளில் தொடங்கி வைத்தேன். இது எனது கனவுத் திட்டம். நான் மட்டுமே முதல்வன் அல்ல, தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரையும் நான் முதல்வன் என்று சொல்ல வைத்துக் கொண்டிருக்கும் திட்டம் அது என பெருமிதம் கொண்டார்.

இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். உங்களிடம் உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் தரப்பட்டுள்ளது. மாநில அளவிலும், ஒன்றிய அளவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் என்னென்ன வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இந்தக் கையேடு சொல்கிறது.

தந்தை பெரியார் அவர்கள்தான் சொல்வார்கள்..."தமிழர்களே நீங்கள் எங்காவது போய் முன்னேறி விடுங்கள்" என்பார். அத்தகைய வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறோம். தமிழ்ப் பெருமிதம் என்ற கையேடும், கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகமும் ஒரு லட்சம் மாணவ மாணவியர் கைக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. இணையம் வழியாக இன்னும் பல லட்சம் பேருக்கு போய்ச் சேர்ந்திருக்கும். இந்த கையேட்டை தயாரித்து வழங்கிய தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி வேலை வாய்ப்புக் கையேடு என்பது உங்களை உயர்த்திக் கொள்ள! தமிழ்ப் பெருமிதம் என்ற கையேடு, நமது இனத்தையும் மொழியையும் உயர்த்துவதற்காக! தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, தன்னைப் பற்றிய சிந்தனையும் இருக்கவேண்டும், நாட்டைப் பற்றிய பொது நோக்கமும் இருக்கவேண்டும். இரண்டுமே முக்கியம்தான் என்று அறிவுறுத்தினார்.

இந்த அரங்கத்தில் இருக்கும் உங்களைப் போல, இளம்வயதில் அதாவது 18 வயதில், 1971-ஆம் ஆண்டு கோவையில் நடந்த திமுக மாணவர் மாநாட்டுக்கு, பார்வையாளராகச் சென்றிருந்தேன். அப்போது அழைப்பிதழில் பெயர் போடும் அளவுக்கு முக்கியப் பேச்சாளராக நான் வளரவில்லை. 'எனக்கு ஒரு நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு தர முடியுமா?' என்று மாநாட்டு தலைவராக, பொறுப்பாளராக இருந்த எல்.கணேசன் அவர்களிடம் அனுமதி கேட்டு அனுமதியும் கொடுத்தார்.

பின்னர் ''மொழிக்காக, நம்முடைய இனத்துக்காக போராடுகிறோம். போராடுகிற இந்த நேரத்திலே நம்முடைய உயிரை இழக்கின்ற தியாகத்தைச் செய்வதற்குக்கூடக் காத்திருக்கிறோம். மொழிக்காக, இனத்துக்காக 'தனயனை இழந்த தந்தை' என்று என்னுடைய தந்தைக்கு பாராட்டுக் கிடைக்கும்" என்று நான் பேசினேன்.

இது எனது முதல் மாநாட்டு பேச்சு ஆகும். அதே மேடையில், தலைவர் கலைஞர் இருந்தார். அப்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். எனக்கு மட்டுமல்ல, இளைஞர்கள் அனைவருக்கும் அவர் அறிவுரை கூறினார். "முதலில் நன்கு படியுங்கள்! அதுதான் உங்களது பெற்றோருக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய முதல் கடமை" என்று குறிப்பிட்டார் நம்முடைய தலைவர் கலைஞர். அதே அறிவுரையைத்தான் இன்றைய இளைஞர்களுக்கும் நான் சொல்வேன். படியுங்கள்! என்றார்.

இதுதான் என்னுடைய முதல் வேண்டுகோள்.. கல்விதான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து!.. அந்த சொத்தைச் சேகரித்துவிட்டால் மற்ற சொத்துகள் தானாக வந்து சேர்ந்துவிடும். எனவே, பள்ளிக்காலத்தில் கல்லூரி காலத்தில் படிப்பில் இருந்து கவனச் சிதறல்கள் இருக்கக்கூடாது. எந்த சூழலிலும் தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகிவிடாதீர்கள். அது உங்கள் உடல் நலனுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டு நலனுக்கும் கேடு விளைவிக்கும் என்று கல்வி கற்பதின் முக்கியத்துவத்தை மு.க.ஸ்டாலின் உணர்த்தினார்.

அதேபோல் இணையத் தளங்களை, சமூக வலைத்தளங்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள். குறிப்பாக மாணவிகள், நிச்சயமாக படித்தாக வேண்டும். பட்டங்கள் வாங்கத் தவறக்கூடாது. வாங்கிய பட்டத்துக்குத் தகுதி வாய்ந்த வேலைகளுக்கு நிச்சயம் செல்லவேண்டும் என்று கூறிய அவர், உயர் பதவிகளை அடைய வேண்டும். தங்களின் பொருளாதாரத் தேவையை தாங்களே பணியாற்றிப் பெறும் தகுதியை அடைய வேண்டும். மாணவராக இருந்தாலும், மாணவியாக இருந்தாலும் தைரியமும், துணிச்சலும், தன்னம்பிக்கையும், அஞ்சாமையும் வேண்டும் என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசினார்.

சமூகநீதி, சமநீதி, சமதர்மம், சகோதரத்துவம் ஆகிய நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். எனக்கு ஒரு மாபெரும் கனவு இருக்கிறது. "எல்லார்க்கும் எல்லாம்" என்பதுதான் அந்தக் கனவு! கனவு என்றால், கண்ணை மூடிக் கொண்டு கற்பனை உலகில் மிதப்பது அல்ல! ஒரு லட்சியத்தை நெஞ்ல் ஏந்தி நாளும் உழைப்பது தான் என்றார்.

அந்த உழைப்பைத்தான் நாள்தோறும் நான் இந்த தமிழ் சமுதாயத்திற்காக தந்துகொண்டு இருக்கிறேன் என்றும் தன்னுடைய கனவை நோக்கிய பெரும் பயணத்துக்கு கைகாட்டி, கலங்கரை விளக்காக இருக்கக் கூடியவைதான், மாபெரும் தமிழ்க் கனவு போன்ற நிகழ்ச்சிகள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு; வலுத்த எதிர்ப்பால் முதலமைச்சர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.