ETV Bharat / state

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் மனு தாக்கல் - MK Stalin file quash petition

சென்னை: அமைச்சர் வேலுமணிக்கு எதிராக நடந்துவரும் மாநகராட்சி டெண்டர் முறைகேட்டு வழக்கை திசைத் திருப்பும் நோக்கில் தன் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

MK Stalin file quash petition against summon order
அமைச்சர் வேலுமணி தொடுத்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் மனுத்தாக்கல்!
author img

By

Published : Feb 18, 2020, 10:51 PM IST

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்தாண்டு செப்டம்பர் 4ஆம் தேதி முரசொலியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "உள்ளாட்சித் துறை ஊழல் துறையாக மாறிவிட்டது. அதில் உள்ள அரசு அலுவலர்கள் அனைவரும் ஊழலுக்குத் துணை போயிருக்கின்றனர்.

எம்-சாண்ட் வாங்கியதில் ஆயிரம் கோடி ஊழல் நடந்திருந்திருக்கிறது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கையை எதிர்த்து அமைச்சர் வேலுமணி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மு.க. ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

நேற்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது, வரும் 24ஆம் தேதியன்று மு.க. ஸ்டாலின் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், "மாநகராட்சி டெண்டர்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அறப்போர் இயக்கம் என்ற இயக்கம் பல தகவல்களை வெளியிட்டது.

இதேபோல் ஆற்று மணலுக்குப் பதிலாக எம்-சாண்ட் பயன்படுத்தி அரசு டெண்டர்களில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தச் செய்திகளின் அடிப்படையிலும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், ஊரக உள்ளாட்சித் துறையில் ஊழல் நடந்திருப்பது குறித்து மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கை வெளியிட்டிருந்தார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேட்டு வழக்கை திசை திருப்பும் நோக்கிலேயே தன் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

எனவே அமைச்சர் வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என்றும் அந்த வழக்கில் பிப்ரவரி 24ஆம் தேதி முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க : அங்கே இருப்பது தமிழுக்கு எதிரான ஆட்சி, இங்கே இருப்பது துப்பில்லாத ஆட்சி - மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.