ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது ஆளுநர் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆளுநரிடம் கேட்டு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
இதையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், "பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டு, இரு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
அமைச்சரவை தீர்மானம் மற்றும் மாநில உரிமை குறித்து சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக அரசிற்கு உச்ச நீதிமன்றம் 'குட்டு' வைத்துள்ளது. எனவே, இனியாவது உடனடியாக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுங்கள் என ஆளுநரை வலியுறுத்தி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுப்படுத்தவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ட்விட்டரில் ட்ரெண்டாகும் 'குட்டி' கெஜ்ரிவால் - தேர்தல் முடிவுகளால் ஆம் ஆத்மி உற்சாகம்