ETV Bharat / state

சென்னையில் ஆட்சியர்களுடன் மாநாடு - ஸ்டாலினின் 'சிறப்பான' வியூகம் - மார்ச் 10ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 10 முதல் 12ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

மார்ச் 10ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு

author img

By

Published : Mar 5, 2022, 8:17 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு இன்று (மார்ச் 5) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மார்ச் 10 முதல் 12ஆம் தேதி வரை சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

பல்வேறு அறிவிப்புகள்

அரசு கடந்த பத்து மாதங்களில் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதமாக பல்வேறு புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில், ஆளுநர் உரை, சட்டப்பேரவை விதி எண். 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கை, அமைச்சர்களால் மானிய கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என மொத்தம் 1,704 அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்பட்டு, அதில் 80 விழுக்காட்டிற்கும் மேலான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

முக்கிய ஆலோசனை

இந்த அறிவிப்புகளின் கீழ் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் செயல்பாட்டை, மாவட்ட ஆட்சியர்களின் மூலமாக அறிந்து கொள்வதற்காகவும், அவற்றை மேலும் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து உரிய அறிவுரைகளை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இதுவரை வனத்துறை அலுவலர்கள் முதலமைச்சரின் ஆய்விலோ, மாநாட்டிலோ கலந்து கொண்டதில்லை. முதல்முறையாக வனத்துறை அலுவலர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு, வனத்துறை தொடர்பான திட்டங்களை முதலமைச்சர் ஆலோசனை செய்கிறார்.

மக்களின் தேவை

இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆய்வினை முதலமைச்சர் மேற்கொள்வார். மேலும், வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக அறிந்து, அதன் அடிப்படையில் சிறப்பான திட்டங்களைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மறைமுக தேர்தலில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்: தொல்.திருமாவளவன்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.