திருவல்லிக்கேணியில் கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பிரசவத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த (மே26) ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் இரண்டாம் தளத்தில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து மளமளவென எரிந்தது.
இந்த விபத்தில் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அங்கிருந்த குழந்தைகளை மாற்று அறைக்கு அவசர அவசரமாக மாற்றி அவர்களின் உயிரை காப்பாற்றினர். இதனால், குழந்தைகள் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த விபத்தில் இருந்து சுமார் 36 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டன.
குறிப்பாக, விபத்தின்போது தீயணைப்பு வீரர்கள் வரும் முன்னரே செவிலியர் ஜெயக்குமார் என்பவர் அங்கு இருந்த கண்ணாடிகளை உடைத்து குழந்தைகள், தாய்மார்களை துணிச்சலாக போராடி காப்பாற்றினார்.
இதுகுறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “36 பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனை தீ விபத்தின் போது, தீயணைப்பு வீரர்கள் வரும் முன்பே கண்ணாடிகளை உடைத்து குழந்தைகள், தாய்மார்களின் உயிர்களைக் காத்த துணிச்சலான செவிலியர் ஜெயக்குமாரை நேரில் அழைத்துப் பாராட்டினேன்! உயிர் காப்பதே அறம்!” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 126ஆவது பிறந்தநாள்: காங்., சார்பில் மரியாதை