ETV Bharat / state

'இங்க இருந்த கிணத்த காணோம் சார்!!!' வடிவேல் காமெடி பாணியில் புகார்! - வடிவேல் காமெடி பாணியில் புகார்

'மதுரவாயலில் பொதுமக்கள் 70 ஆண்டுகள் பயன்படுத்தி வந்த பழமையான கிணற்றைக் காணவில்லை; அந்த கிணற்றை மீட்டுத்தரவேண்டும்' என தேவேந்திரன் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இங்க இருந்த கிணத்த காணோம் சார்!!! வடிவேல் காமெடி பாணியில் புகார்

author img

By

Published : Aug 10, 2022, 3:59 PM IST

சென்னை: மதுரவாயல், பாரதியார் தெரு பகுதியில் சர்வே எண் 113/A..141/1A,114/ 2bல் இருந்த பழமை வாய்ந்த கிணற்றை 70 ஆண்டுகளாகப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பழமையான அந்த கிணறு பாழடைந்து இருந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் தேவேந்திரன் அளித்துள்ள புகாரில், 'கடந்த மாதம் தான் அந்த தெரு வழியாகச்செல்லும்போது பாழடைந்த கிணறு அங்கு இருந்தது. தற்போது 1.8.2022 அந்த வழியாகத் தான் சென்றபோது முன்பிருந்த கிணற்றைக் காணவில்லை. இதுகுறித்து அந்தப் பகுதி மக்களை விசாரித்தபோது அனைவருமே கிணறு தற்போது இல்லை என்று கூறினர். ஆகையால், காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்து தர வேண்டுமென சமூக அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என தேவேந்திரன் புகாரில் தெரிவித்திருந்தார்.

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர் தேவேந்திரன், 'கிணறு காணாமல்போனது தொடர்பாக தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும்; ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதி என்பதால் அவர்கள் நல்லது கெட்டது காரியங்களுக்கு தண்ணீர் தேவைக்காக பயன்படுத்திய கிணற்றை, தற்போது தனி நபர் கட்டட கழிவுகளைக்கொட்டி மூடி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். பொதுகிணற்றை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத்தெரிவித்தார்.

இங்க இருந்த கிணத்த காணோம் சார்!!! வடிவேல் காமெடி பாணியில் புகார்

இதையும் படிங்க: கி.பி.14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டெடுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.