சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சளி இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 18 ஆம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விஜயகாந்தை பரிசோதித்த மருத்துவர்கள் சளி மற்றும் இருமல் அதிகமாக அவருக்கு இருப்பதால் ஒரு சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தினர். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு மேலாகியும் அவரது உடல்நிலை குறித்து எந்த வித தகவலும் வெளியிடப்பட வில்லை. இதனால் சமூக வலைதளங்களில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பொய்யான தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்று (நவ.23) மருத்துவமனை நிர்வாகம் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், “காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பு தருவதாகவும், மருந்துகள் அனைத்தையும் உடல்நிலை ஏற்று கொள்வதாகவும், சுயநினைவோடு இருப்பதாகவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் வீட்டிற்குச் சென்று வழக்கம்போல் தனது வேலையைச் செய்வார் எனவும், அதுவரை மருத்துவக்குழு கண்காணிப்பில் இருப்பார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்!