ETV Bharat / state

பெருங்குடி குப்பை கிடங்கு அகழ்ந்தெடுக்கும் பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும்" - கே.என்.நேரு - குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் பணி

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு அகழ்ந்தெடுக்கும் பணி மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

v
nehru
author img

By

Published : Oct 12, 2021, 4:35 PM IST

சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கும் பணியை நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

225 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் உள்ள 34.02 லட்சம் கன மீட்டர் குப்பைகளை ரூ. 350 கோடி செலவில் அகழ்ந்தெடுக்கும் பணி மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டப்ரேவை உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது," பயோ மைனிங் முறையில் குப்பைகள் பிரித்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேயராக இருந்த போது இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இப்பகுதியில் கடந்த 10 வருடமாக எந்த பணிகளும் நடைபெறவில்லை. குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் பணி 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொடுங்கையூரிலும் இதே போன்று பணிகள் நடைபெறவுள்ளது. இனி வரும் காலங்களில் குப்பைகளை கொட்டும் போதே மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என பிரித்தெடுக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற பகுதிகளில் மொத்தம் 2 கோடி டன் குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் 44 இடத்தில் குப்பைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு 164 ஏக்கர் நிலம் சரி செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 55 லட்சம் டன் குப்பைகள் அகழந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் பணிகளை விட குப்பைகளால் வரும் சுகாதார சீர்கேடுகளை தடுப்பதே முக்கியமாக உள்ளது" என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் உள்ள குப்பைகள் அகழ்ந்தெடுக்கும் பணி சென்னை மக்களுக்கு விடியல். இந்த இடத்தை பசுமை நிலமாக மாற்றும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார்.

இந்த திட்டம் சோழிங்கநல்லூர் மக்களுக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் சென்னை மக்களுக்கும் கனவுத் திட்டம். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தலின் போது பெருங்குடி குப்பை கிடங்கு அகற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். திமுக அளித்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.