ETV Bharat / state

'டெண்டரே இன்னும் முடியல, குற்றச்சாட்டு': அண்ணாமலைக்கு மா.சு பதிலடி! - அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி

டெண்டர் பணிகளே முடிவடையாத நிலையில் நியூட்ரிஷன் கிட் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது, 48 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி
அண்ணாமலைக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி
author img

By

Published : Jun 5, 2022, 7:47 PM IST

சென்னை: சென்னை மதுரவாயல் அருகே அயப்பாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா இன்று (ஜூன் 5) கொண்டாடப்பட்டது.
அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "நியூட்ரிஷன் கிட் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். டெண்டர் பணிகளே முடிவடையாத நிலையில் முறைகேடு நடந்துள்ளது எனக்குற்றஞ்சாட்டுகிறார். 48 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது எனக் கூறுகிறார்.

அண்ணாமலை அறிவுப்பூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன். ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். டெண்டர் இன்னும் கோரப்படவில்லை. இன்னும் 2 நாட்களில் டெண்டர் விடப்படும். அதற்குள் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறுவது எந்த வகையில் நியாயம். குற்றச்சாட்டை அண்ணாமலை நிரூபிக்க வேண்டும்.

இல்லை என்றால் அவர் மற்ற துறைகளின் கூறி வரும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையும் தெரிந்து விடும். இரும்புச்சத்து உள்ள மருந்துப்பொருட்கள் வெளியில் இருந்து தான் வாங்க வேண்டும். ஆவினிடம் அது இல்லை. ஆவின் அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ஆவினில் வாங்க முடியும் என்றால் நிச்சயம் அங்கு தான் வாங்கப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் 8 பேருக்கு பிஏ5 வகை கரோனாவும், 4 பேருக்கு பிஏ4 வகை கரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது. 12 பேரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். நலமாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி

இதையும் படிங்க: G square நிறுவனம் விதிமீறலில் ஈடுபடுகிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.