ETV Bharat / state

’காணாமல்போன மீனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள்’ - அமைச்சர் ஜெயக்குமார் - சென்னை மீனவர்கள்

சென்னை: காணாமல்போன மீனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று மீனவர்களின் உறவினர்களிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Minister's report on action taken to rescue missing fishermen

author img

By

Published : Aug 13, 2020, 2:44 AM IST

காணாமல்போன மீனவர்களை மீட்டுத்தர வலியுறுத்தி சென்னை மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்களின் உறவினர்கள் குவிந்தனர். தகவலறிந்து அங்கு வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், காணாமல்போன மீனவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்துவருவதாக அவர்களிடம் கூறினார்.

இந்தப் பணியில் உள்ளுர் படகுகள், கடலோர காவல்படை விமானம், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், அண்டை நாடுகளுக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

காணாமல்போன மீனவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அழைத்து வரப்படுவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார். இதனையடுத்து மீனவர்களின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

மீனவர்களின் உறவினர்களிடம் ஆறுதல் கூறிய அமைச்சர்

முன்னதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஜூலை 23ஆம் தேதி சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 10 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்று, ஆகஸ்ட் 7ஆம் தேதி கரை திரும்ப வேண்டிய IND - TN - 02 - MM - 2029 , என்ற பதிவெண் கொண்ட ஆழ்கடல் மீன்பிடிப்பு விசைப்படகு கரை திரும்பவில்லை.

மீன்வளத்துறை, இந்திய கடலோர பாதுபாப்பு படை மற்றும் சென்னை மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த உள்ளூர் விசைப்படகுகளைக் கொண்டு காணாமல்போன மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீன்வளத்துறை இயக்குநர் சார்பில் அண்டை மாநிலமான ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்பகுதிகளில் இப்படகினை தேடும் பணியினை மேற்கொள்ள அம்மாநில இயக்குநர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடலோர காவல்படையின் ரஸியா சுல்தான், அமிர்த் கவுர், ராணி ரஹ்மோனி, ராணி கெய்டின்லியு, சி - 438 ஆகிய கப்பல்களும், இரண்டு விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படையிடமிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது.

மேலும், அரசு முதன்மை செயலர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்களால் இந்திய வெளியுறவுத்துறை வழியாக மியான்மர், வங்கதேசம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடல் பகுதிகளிலும் காணாமல்போன மீனவர்கள் படகினை தேடுவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.