சென்னையில் கரோனா பெருந்தொற்று தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை மருத்துவமனையில் அதிகப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் 200 படுக்கைகள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டன. கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் நடமாடும் எக்ஸ்ரே இயந்திரம் செயல்படுவதையும் கேட்டறிந்தார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேரில் சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: செம்மொழித் தமிழாய்வு: மத்திய அரசுக்கு ரஜினி பாராட்டு!