ETV Bharat / state

எடப்பாடி பேட்டியைப் பார்க்கும்போது சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை - தங்கம் தென்னரசு

பல்வேறு முக்கியமான திட்டங்கள் அடங்கிய சிறப்பு மிக்க இந்த ஆளுநர் உரையை அதிமுக அரசு புறக்கணித்து உள்ளது. எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கும் பேட்டியைப் பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jan 5, 2022, 8:39 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டமானது கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஜனவரி 5) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடுவது தொடர் கதையாகி உள்ளது. தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ளது.

பொங்கல் பரிசுத்தொகையைக் கூட மக்களுக்கு திமுக அரசு வழங்கவில்லை. சிறப்பாக செயல்பட்டு வந்த அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சட்டம் ஒழுங்கை சரிசெய்ய முதலமைச்சர் கவனம் செலுத்தவில்லை. பெண்கள், பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது" என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "எல்லோருக்கும் முன்மாதிரியான நிர்வாகத்தைத் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிவருகிறார். குறைந்த காலத்தில் இந்த அரசு மிக அற்புதமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. அவற்றில் சிலவற்றைச் சுட்டிக்காட்டி ஆளுநர் உரை சிறப்பாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

மாநில கல்வி வளர்ச்சியை மேலும் உறுதி செய்யக்கூடிய வகையில், மாநிலக் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் நிறுவனங்களை மிகச்சிறந்த அளவிலே ஒரு மாற்றுவதற்கான பெருந்திட்டம் 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு அத்தனை பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. புதிய பள்ளிக் கட்டடங்கள் உருவாக்கப்படும். உயர்தர ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.

பல்வேறு முக்கியமானத் திட்டங்களை அடங்கிய சிறப்புமிக்க இந்த ஆளுநர் உரையை அதிமுக அரசு புறக்கணித்து உள்ளது. எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கும் பேட்டியைப் பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை.

திமுக ஆட்சியில் போதை குட்கா பொருட்கள் விற்பனை அதிகரித்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். ஆனால், குட்கா விற்பனைக்குத் தமிழ்நாடு முழுவதும் பிரபலப்படுத்தப்பட்ட ஆட்சி என்று சொன்னால் அது கடந்த அதிமுக ஆட்சி.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

போதைப் பொருட்களைப் பற்றிப் பேசுவதற்கு அதிமுகவிற்குத் தகுதி இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தை மறைத்துவிட்டு, அவ்விவகாரத்தில் என்ன தீர்வு காணப்பட்டது என்பதை எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும்.

பொள்ளாச்சி விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைக் கூற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டது எடப்பாடி அரசு. ஆனால் திமுக அரசில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கி உள்ளதாகப் பொய் கூறுகிறார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கடந்த ஆண்டு தேர்தல் விரைவில் வரப்போகிறது என்ற அடிப்படையில்தான் அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதற்கு முன்பு பொங்கலுக்கு அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகையாகப் பணம் வழங்கப்பட்டதா எனக் கேள்வி எழுப்பினார்.

பொங்கலுக்குத் தேவையான தரமான பொருட்களை நாங்கள் பொதுமக்களுக்கு வழங்கி உள்ளோம். அம்மா மினி கிளினிக்குகள் காழ்ப்புணர்ச்சிக்காக மூடப்படவில்லை. அங்கு மருத்துவர்கள், செவிலியர் நியமனம் செய்யப்படவில்லை.

அதனால்தான் மூட வேண்டிய நிலை வந்தது. அப்படியானால் அம்மா உணவகங்கள் அதே பெயரில் எப்படி இயங்கி வருகிறது என்பதை எடப்பாடி பழனிசாமி தான் விளக்க வேண்டும்.

மோசடியாக நகைக் கடன் பெற்றவர்களுக்கு நாங்கள் கடன் தள்ளுபடி வழங்கவில்லை. ஆனால், முறையாகக் கடன் பெற்ற தகுதியான நபர்களுக்கு நாங்கள் கடன் தள்ளுபடி வழங்கியுள்ளோம். கோடநாடு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ஜெ., வேதா நிலையம் வழக்கு: அரசு கையகப்படுத்தியது சட்ட விரோதம் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.