ETV Bharat / state

அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் - அமைச்சர் மா.சு. தகவல்!

நவம்பர் 23-ம் தேதி அரசு சார்பில் அனைத்து மருத்துவமனைகளில் இருக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை நிபுணர்களை அழைத்து ஆலோசனை கூட்டம்

author img

By

Published : Nov 19, 2022, 5:52 PM IST

சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாட்டு பிரிவு சார்பில் நடக்கும் தமிழ்நாடு மெட்க்கிளேவ் (Tamilnadu Medclave) வருடாந்திர தேசிய கருத்தரங்கம் சென்னை அடையார் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய அவர்,”தமிழகம் சுகாதார குறியீட்டில் இந்திய அளவில் முன்னோடியாக இருப்பதகாவும், அகில இந்திய அளவில் மக்கள் தொகை வளர்ச்சியில் தமிழகத்தில் 15.6% மாகவும், இந்திய அளவில் 17.7% மாக இருக்கிறது என்றார். மேலும், பெண் சமூகத்தின் வளர்ச்சி தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது. சிசு மரணம் இந்திய அளவில் 28% உள்ள நிலையில் தமிழகத்தில் 13% மாக உள்ளது என்ற அவர், மகப்பேறு இறப்பு, சிசு மரண விகிதம் உள்ளிட்டவை இந்தியாவின் மொத்த சராசரியை விட தமிழகத்தில் குறைந்து இருந்தாலும் அதை பூஜ்யம் என்ற அளவிற்கு வருமாறு நாம் மாற்ற வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,”தமிழகத்தில் மொத்தமாக 286 ஆரம்ப சுகாதார நிலையம், 18 மாவட்ட அரசு மருத்துவமனை தற்போது உள்ளது. மேலும், 24 புதிய மாவட்ட அரசு மருத்துவமனை அமைக்க அரசானை வெளியிடப்பட்டுள்ளது. 1,100 கோடி அளவில் அதன் தரத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றார். மேலும், 71 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் தமிழகத்தில் தான் உள்ளது” என தெரிவித்தார்.

மேலும்,”கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவி பிரியா மரணம் என்ற விரும்பதகாத சம்பவம் ஒன்று ஏற்பட்டிருந்தது. இதற்கு ஒரு தீர்வு எடுக்க வேண்டும் என்று வரும் 23ஆம் தேதி ஒட்டு மொத்த மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி, அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகள், தனி கட்டமைப்பு உறுதிப்படுத்துவது மாதிரியான விஷயங்களை தணிக்கை செய்வது குறித்து ஆலோசனை செய்ய இருக்கிறோம்”என்றார்.

மேலும்,”இந்த கூட்டத்தில் 500 - க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும், இந்த கூட்டம் ஐரோப்பிய நாடுகளில் நடப்பதை போன்று நடைபெற இருக்கிறது. இந்தியாவிலேயே அறுவை சிகிச்சை தணிக்கை செய்வது மட்டுமல்லாமல் அறுவை சிகிச்சையில் தனிப்பட்ட கவனம் செலுத்துவது தொடர்பாக தமிழகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் அரசு மருத்துவமனையாக இருந்தாலும் மருத்துவர்களின் நோக்கம் ஏழை எளிய மக்களை மட்டும் அல்லாது ஒட்டுமொத்த மக்களின் உயிரை காப்பாற்றுவதே நமது சேவை என்று தொடர்ந்து பணியாற்றுவோம்” என கூறினார்.

இதையும் படிங்க: பிடிஆரை கலாய்த்த ஐ.பெரியசாமி.. அமைச்சர்கள் மோதலுக்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.