'தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு உணவு பரிமாறுவதில் அம்மா கேன்டீன்கள் ஒரு அற்புதமான வேலையைச் செய்கிறார்கள். அவர்களின் முயற்சிகளுக்கு தேசம் வணக்கம் செலுத்துகிறது' என சுவச் பாரத் சமூக வலைதளப்பக்கம் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தது.
இதை ரீட்வீட் செய்துள்ள அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "இரவும் பகலும் அயராது உழைத்து வருகின்ற அம்மா கேன்டீன்களில் பணியாற்றி வரும் உள்ளூர் நிர்வாகத்திற்கும் உள்ளாட்சி வாரியர்ஸுக்கும் மிக்க நன்றி. முதலமைச்சர் வழிகாட்டுதலின் கீழ், ஏழைகளுக்கு இலவசமாக தரமான உணவை வழங்குவதில், தேசத்திற்கு முன்மாதிரியாக இருப்பது எங்களுக்கு ஒரு பெருமையான தருணம்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க...'வங்கிக்கடன் செலுத்தாதவர்களுக்கு ஏன் இந்த விதி பயன்படுத்தப்பட்டது?'