ETV Bharat / state

வைகுண்ட ஏகாதசி அன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்புத் தரிசனக் கட்டணம் ரத்து - அமைச்சர் சேகர்பாபு தகவல்! - Parthasarathi temple

Minister Shekharbabu Byte: வைகுண்ட ஏகாதசி அன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 10:47 PM IST

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சார வாரியம், சென்னை குடிநீர் வாரியம், தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவ கோயில்களிலும் வரும் 23ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படவுள்ளது. கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்குத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்தனர். இந்தாண்டு கூடுதலாக 20 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதியோர்களுக்குத் தனி வரிசை: அந்த வகையில் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசிக்குச் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றைச் செய்து தருவதற்காக ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொண்டோம்.

வைகுண்ட ஏகாதசி அன்று கோயிலுக்குக் கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுர வாசல் வழியாகச் சொர்க்க வாசல் சேவைக்கு வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களும் அனுமதிக்கப்படுவர். டி.பி கோயில் தெரு வழியாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களுக்குத் தனி வரிசை இந்தாண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்புத் தரிசனக் கட்டணம் ரத்து: சொர்க்க வாசல் திறப்புக்கு அதிகாலை இரண்டரை மணிக்கு ஆயிரத்து 500 பக்தர்கள் அனுமதிப்பதென்றும், உபயதாரர்கள், கட்டளை தாரர்கள் 850 நபர்கள் அனுமதிப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது. அதன் பிறகு காலை ஆறு மணி முதல் இரவு நடை மூடுகின்ற வரையில் பொது தரிசனம் தான் என இந்த ஆண்டு கடைப்பிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் சிறப்புத் தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது.

பாதுகாப்புப் பணி: கோயிலில் கூடுகின்ற பக்தர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படுமாயின், அவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிப்பதற்காகக் கோயிலுக்கு உள்ளேயும், வெளியிலும் 6 சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. பக்தர்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிவறைகள் 20 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றது. காவல்துறையின் சார்பில் 2 துணை ஆணையர்கள் தலைமையில் 3 ஷிப்ட்களாக, 18 உதவி ஆணையர்கள், 54 காவல் ஆய்வாளர்கள், 400க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசரக் கால ஊர்திகள் நிறுத்தப்பட இருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2 கூடுதல் ஆணையர்கள், 6 இணை ஆணையர்கள், 4 துணை ஆணையர்கள், 6 உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் என 150 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

பொது தரிசனத்திற்கும் ஏற்பாடு: ஆகவே கடந்தாண்டை விட இந்த ஆண்டு அதிகமான அளவிற்குப் பக்தர்கள் வருவதற்கும், விரைவாகத் தரிசனம் செய்வதற்கும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்குச் சிறப்புத் தரிசனம் செய்வதற்கும், காலை 6 மணி முதல் இரவு கோயில் நடை மூடுகின்ற வரை பொது தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைப் பக்தர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கனக சபை மீதேறி தரிசனம்: சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தளவில் தீட்சிதர்கள் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் கனக சபை தரிசனத்திற்குத் தடை கோரி மனு அளித்திருந்தனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதற்குத் தடை விதிக்கவில்லை, வழக்கு நிலுவையில் தான் இருக்கின்றது. ஆகவே விசேஷ நாட்களில் கனக சபையின் மீதேறுவதில் அசௌகரியம் இருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் அதையே காரணம் காட்டி கனக சபை மீதேறி தரிசனம் செய்வதற்குத் தடை செய்வதை இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது. கோயில்களில் சிறப்புத் தரிசனக் கட்டணங்களை படிப்படியாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் எண்ணமும், இந்து சமய அறநிலையத்துறையின் எண்ணமும் ஆகும்.

கோயிலில் அனைவரும் சமமாகச் செல்வதற்காகவும், சிறப்புத் தரிசனம் என்று வருகின்ற போது பொது வரிசையில் வருபவர்களுக்குத் தரிசனத்திற்குத் தாமதம் ஏற்படுவதாலும் விரைவாகத் தரிசனம் நடைபெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காகவும் இந்த சிறப்புத் தரிசனக் கட்டணத்தை, திருவிழா காலங்களில் ரத்து செய்வதென்று முடிவெடுத்தோம்.

சாமி தரிசனம் செய்வதற்கு வசதி: திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று சிறப்புத் தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த நான்கு மாதங்களாகப் பௌர்ணமி தினங்களில் அனைவரும் பொது தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்ற சூழல் தவிர்க்கப்பட்டு விரைவாக சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக இருப்பதால், இதனை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இந்த ஆண்டு பார்த்தசாரதி கோயில் சிறப்புத் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்கிறோம்.

மேலும், எங்கெல்லாம் இதுபோன்ற சாத்தியக்கூறுகள் இருக்கின்றதோ அந்தந்த கோயில்களில் விழாக் காலங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தவிர்த்து, சிறப்புத் தரிசனத்தை படிப்படியாக ரத்து செய்வதற்கு துறை முயற்சிக்கும். பக்தர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது தான் இந்த அரசின் கடமையாகும். கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் பார்த்தசாரதி கோயிலில் மார்கழி மாதத்தில் இசைக் கல்லூரி மாணவர்களின் திருப்பாவை பாசுரம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் கனமழைக் காலத்திலும் ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை.. ஆவின் நிர்வாகம் அறிவிப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.