ETV Bharat / state

'அணில விடுங்க... அதிமுகவிடம் கேள்வி கேளுங்க' - ராமதாஸுக்கு செந்தில் பாலாஜி பதிலடி - அணில் தான் காரணம்

மின்வெட்டுக்கு அணிலும் ஒரு காரணம் என்பதைப் புகைப்பட ஆதாரத்துடன் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டு, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Senthil Balaji
செந்தில்பாலாஜி
author img

By

Published : Jun 23, 2021, 11:53 AM IST

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே மின்வெட்டுப் பிரச்சினை அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இந்நிலையில், இந்த மின்வெட்டுக்கான காரணம் என்ன என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு விளக்கம் அளித்தார்.

மின்தடை ஏற்படுத்தும் அணில்

அதில் ஒரு காரணமாக அவர், "கடந்த அதிமுக ஆட்சியில் எந்தப் பராமரிப்புப் பணிகளும் செய்யப்படவில்லை. சில இடங்களில் செடிகள் வளர்ந்து கம்பிகளோடு மோதும்போது அதில் அணில்கள் ஓடுகின்றன. அப்போது, இரண்டு லைன்கள் ஒன்றாகி மின்சார தடை ஏற்படும்" என்பதையும் குறிப்பிட்டார்.

பல தரப்பினர் கருத்து

அவ்வளவுதான், நமது இணையவாசிகள் மின்தடைக்கு அணில்தான் காரணம் என ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். பல தரப்பினரும் கருத்து பகிரத் தொடங்கினர்.

செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம்!

அதில், குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அமைச்சர் சொல்லிய அந்தக் குறிப்பிட்ட காரணத்தைக் கிண்டலடிக்கும் வகையில் விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். அதில், "மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம்!

பூமிக்கு அடியில் அணிலா

  • மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம்!#மின்தடை #TNpowerCuts

    — Dr S RAMADOSS (@drramadoss) June 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும், ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?" என்று குறிப்பிட்டிருந்தார்.

புகைப்பட ஆதாரம் வெளியிட்ட அமைச்சர்

இதற்குப் பதிலளிக்கும்விதமாக செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்பது மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை; மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும்கூட சில இடங்களில் மின்தடை ஏற்பட்டிருக்கின்றது என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அணிலைப் பற்றி யோசிக்காமல், அதிமுகவிடம் கேளுங்கள்

தொடர்ந்து அவர் ராமதாஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாகச் சித்திரிக்கும் ராமதாஸ், தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்புப் பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்! அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்" என்று அறிவுரை வழங்கினார்.

  • கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன். (1/3) pic.twitter.com/ZSMiI5qeQC

    — V.Senthilbalaji (@V_Senthilbalaji) June 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்

மேலும் செந்தில் பாலாஜி, "பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்துச் சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள்.

எந்தச் சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குப் பெரிதன்று! திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்” என சூளுரைத்தார்.

புகைப்பட ஆதாரத்துடன் அமைச்சர் வெளியிட்ட பதிவு, #அணில்தான்_காரணம் என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்டாகிவருகிறது.

இதையும் படிங்க: 10 நாட்களில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.