சென்னை: தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் என 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, "பாதுகாப்பு வழங்குமாறு் கேட்காமலேயே தமிழக காவல்துறையினர் எவ்வாறு பாதுகாப்பை வழங்குவார்கள்? என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், வருமான வரிச்சோதனை முடிவடைந்த பிறகு, முழு விவரங்களுடன் விளக்கம் அளிக்கிறேன். சட்டமன்ற தேர்தலின்போதே வருமான வரி சோதனையை எதிர்கொண்டோம். வருமான வரிச்சோதனை ஒன்றும் எங்களுக்குப் புதிதல்ல. வருமான வரிச்சோதனை நடத்தி வரும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என கூறினார்.
எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் சோதனை நடைபெறவில்லை. எனது சகோதர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் மட்டுமே சோதனை நடைபெற்று வருகிறது. சோதனைக்கு வரும் போது சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை பழிவாங்க ஐடி சோதனை; இதெற்கெல்லாம் திமுக அஞ்சாது: அதிரடி காட்டிய ஆர்.எஸ்.பாரதி!
ஆனால் இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார். சோதனை நடைபெறும் இடங்களில் ஆதரவாளர்கள் யாரும் இருக்கக் கூடாது. அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தியதை அடுத்து எனது ஆதரவாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
2006ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒரு சதுர அடி நிலத்தைக் கூட நானோ எனது குடும்பத்தினரோ பதிவு செய்யவில்லை. நண்பர் வீட்டில் கேட்டை திறப்பதற்கு முன்பே வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்துச் சென்றுள்ளனர்.
முகத்தை கழுவி வருவதற்குள் என்ன அவசரம்? யாராவது வருமான ஏய்ப்பு செய்து இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். மேலும், புதிய சொத்துக்கள் இதுவரை நாங்கள் வாங்கவில்லை, வாங்க போவதுமில்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு பிரச்சனையா? : அண்ணாமலை கண்டனம்!