ETV Bharat / state

கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது புதிய சட்டத்தின் மூலம் நடவடிக்கை!

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு புதிய சட்டங்கள் கொண்டு வருவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

minister-sekarbabu-says-that-we-ll-take-action-on-temple-land-occupier
கோயில் நில ஆக்கிரமிப்பாளர்- புதிய சட்டத்தின் மூலம் நடவடிக்கை!
author img

By

Published : Aug 12, 2021, 7:29 AM IST

சென்னை: பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (ஆக.11) ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என்பது சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. கோ சாலைகள், குளங்கள், தேர்கள் போன்றவற்றை பராமரிக்க வேண்டும். இது குறித்தான குறைகளை நிவர்த்தி செய்ய உள்ளோம். இதுவரை 80 கோயில்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

207 புதிய அர்ச்சகர்கள்

திருக்கோயில்களில் ஆய்வு செய்து, குடமுழுக்குப் பணிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின்படி 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

அதில் 35 வயதைக் கடந்தவர்கள் 75 பேர் உள்ளனர். இதனால், 35 வயதுக்கு உள்பட்டவர்களை முதலில் நியமனம் செய்யவுள்ளோம். கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு புதிய சட்டங்கள் கொண்டு வருவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

’உப்பைத் தின்றவர் தண்ணீர் குடிக்க வேண்டும்’

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, உப்பைத் தின்றவர் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். எஸ்.பி. வேலுமணி தவறு செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்கட்டும்” என்றார்.

இதையும் படிங்க: கபாலீஸ்வரர் கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை - பக்தர்கள் வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.