ETV Bharat / state

விரைவில் கோயில்களில் பாதுகாப்புப்பணிக்காக 10 ஆயிரம் பணியாளர்கள் நியமனம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

கோயில்களில் பாதுகாப்புப் பணிக்காக 10 ஆயிரம் பணியாளர்கள் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு, நியமனம் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

கோயில்களில் பாதுகாப்பு பணிக்காக 10,000 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தகவல்

author img

By

Published : Nov 10, 2021, 6:30 PM IST

சென்னை: இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது, கோயில்களின் பாதுகாப்பிற்கென 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேவையான பணியாளர்கள் குறித்து ஆய்வு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் உட்பட 47 திருக்கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருக்கோயில் வாரியாக, எத்தனை பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்புக்குத் தேவை என கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணியாளர் நியமனம்

முதுநிலை அல்லாத திருக்கோயில்களான மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், திருச்சி - சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்,

பண்பொழில் அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், கடலூர் மாவட்டம், மணவாளநல்லூர், அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில்,

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர், வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில் உட்பட 489 திருக்கோயில்களுக்கு பாதுகாப்புப் பணியாளர்களும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் திருக்கோயில் அலுவலர்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்தவுடன் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுத் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்' என அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: காணாமல் போக ஓடை என்ன மளிகைப் பொருளா? - அமைச்சர் சேகர் பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.