ETV Bharat / state

ஈரோட்டில் சூரியன் மலரும் - அமைச்சர் சேகர் பாபு நம்பிக்கை!

author img

By

Published : Feb 6, 2023, 1:31 PM IST

ஈரோடு கிழக்கு தேர்தலை ஒட்டி, ஈரோட்டில் சூரியன் மலரும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் சூரியன் மலரும் - அமைச்சர் சேகர் பாபு நம்பிக்கை!
ஈரோட்டில் சூரியன் மலரும் - அமைச்சர் சேகர் பாபு நம்பிக்கை!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27 அன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (பிப்.7) முடிவடைய உள்ளது. எனவே அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி, இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு (அதிமுக), தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர் சந்திப்பு

அதேநேரம் பொதுக்குழு வழக்கால் இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவினர், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேட்பாளரை தேர்வு செய்வது, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பிய ஒப்புதல் படிவம், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் பெயர் படிவத்தில் இல்லாமை ஆகியவற்றால் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னையில் இருந்து கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “சூரியன் மேற்கு பகுதியில் உதிக்கும்போது வேண்டும் என்றால் சீமான் ஆசை நடக்கும். ஈரோட்டில் சூரியன்தான் மலரும்.

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துதான் பேசி உள்ளார். பாலகிருஷ்ணன் அறிக்கையில் வெட்டி ஒட்டுவது முறையல்ல. கருணாநிதி வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்” என கூறினார்.

முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிதான் வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒப்புதல் படிவத்துடன் டெல்லி செல்லும் அதிமுக அவைத் தலைவர்.! இரட்டை இலை கிடைக்குமா.?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.