ETV Bharat / state

ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மனுக்களின் நிலை என்ன? அமைச்சர் ரகுபதி விளக்கம்!

Minister Regupathy: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நிலுவையிலிருந்த 21 சட்ட மசோதாக்களில், 20 சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார் எனவும், வேளாண் விளைபொருள் சட்ட மசோதா மட்டும் ஆளுநரிடம் உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 9:37 PM IST

சென்னை: உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக முதலமைச்சரும், ஆளுநரும் சுமார் 40 நிமிடங்கள் சந்தித்துப் பேசினர். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி மற்றும் ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோரும் ஆளுநருடன் சந்தித்துப் பேசினர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்கள் ரகுபதி மற்றும் ராஜ கண்ணப்பன், “உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி, ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சருடன், நான்கு அமைச்சர்களும் ஆளுநரைச் சந்தித்தோம். 21 சட்ட மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 10 சட்ட முன்வடிவுகளை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

  • மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை மாநில அரசு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கும் சந்திப்புக்கு அழைத்திருந்தார். அதன்படி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு ஆளுநர் அவர்களை ஆளுநர் மாளிகை, சென்னையில் இன்று… pic.twitter.com/QE1sW9JnHh

    — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பின் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி, அந்த பத்து சட்ட முன்வடிவுகளும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 10 மசோதாக்களை அட்டவணை 7இல் நுழைவு 66-இல் உள்ளது எனக் குறிப்பிட்டு, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி உள்ளார்.

அதை முதல் முறை திருப்பி அனுப்பும்போது எங்களிடம் ஆளுநர் குறிப்பிட்டிருந்தால், அதற்கான விளக்கங்களைத் தந்து அனுப்பி இருப்போம் என ஆளுநரிடம் தெரிவித்தோம். 21 மசோதாக்களில், தற்போது 20 மசோதாக்கள் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வேளாண் விளை பொருள் சட்ட முன்வடிவு மட்டும் தற்போது ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் மீதான விசாரணை கோப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஆளுநரிடம் இன்றைய பேச்சுவார்த்தையில் கேட்டு உள்ளோம். குறிப்பாக, அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 112 பேரின் முன் விடுதலை கோப்புகள் அனுப்பப்பட்ட நிலையில் 68 விடுதலைக்கு அனுமதி வழங்கியும், 2 பேரின் விடுதலை ரத்து செய்தும் ஆளுநர் அரசுக்கு அனுப்பி உள்ளார்.

மீதம் உள்ள 42 முன் விடுதலை கோப்புகள் ஆளுநரிடம் உள்ளது. இதனுடன் மேலும் 7 முன் விடுதலை கோப்புகளை அரசு சார்பில் அனுப்பி உள்ளோம். தற்போது மொத்தமாக 49 முன் விடுதலை கோப்புகள் ஆளுநரிடம் உள்ளது. அதற்கும் விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் 4 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். அதற்கான விளக்கங்களைத் தெரிவித்து, விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். கோரிக்கைகளை எல்லாம் முதலமைச்சர் மனுவாக ஆளுநரிடம் கொடுத்து இருக்கிறார்.

பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்ட முன்வடிவுகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. ஆளுநரிடமே அதிகாரம் உள்ளது. முதலமைச்சரும், அனைத்தையும் ஆளுநரிடம் மனுவாகக் கொடுத்திருக்கிறார். ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு வந்திருக்கிறோம்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அனுமதி வழங்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கும்போது, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி கையெழுத்துப் போடுங்கள் என்பது எங்கள் வேண்டுகோள் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். முதலமைச்சர் எல்லோருக்கும் மரியாதை கொடுக்கக் கூடியவர். ஆளுநரும் முதலமைச்சரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். இன்றைய சந்திப்பு சுமூகமான சந்திப்பாக இருந்தது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெள்ள பாதிப்பு; ரூ.1,000 கோடி நிவாரண தொகுப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவு.. எந்தெந்த இழப்புக்கு எவ்வளவு தொகை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.