ETV Bharat / state

அதிமுக கட்சி ஒற்றுமையோடு தேர்தலை நோக்கி பயணிக்கிறது - அமைச்சர் பாண்டியராஜன்

author img

By

Published : Feb 13, 2021, 6:52 AM IST

சென்னை: தேர்தல் நேரத்தில் எங்களை திசை திருப்பும் எந்த ஒரு வார்த்தைக்கும் நான் பதிலளிக்கமாட்டேன் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

minister
minister

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஒன்பதாவது அம்மா மினி கிளினிக் திட்டத்தை கொருக்குப்பேட்டையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், “பட்டாசு விபத்துக்களை தடுக்க பயிற்சி மையம் சிவகாசியில் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துக்கள் குறைந்து உள்ளன. இன்று நடந்த விபத்து குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டாசு விபத்துக்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தமிழ்நாடு வெற்றி நடை போடுவது போல் அதிமுக தேர்தலை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயல்கின்றனர்.

அந்த எண்ணம் ஈடேறாது. அதிமுக கட்சி ஒற்றுமையோடு தேர்தலை நோக்கி பயணிக்கிறது. இந்த நேரத்தில் எங்களை திசை திருப்பும் எந்த ஒரு வார்த்தைகளுக்கும் நான் பதில் அளிக்க மாட்டேன். இந்த இயக்கத்தோடான ஆதார சக்தி ஓபிஎஸ், அவரை குற்றம் கூறி அவர் செய்த சாதனைகளில் இருந்து திசை திருப்ப முயற்சி செய்கின்றனர்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.