சென்னை வானகரம் துண்டல் பகுதியில் திரு.வி.கலியாணசுந்தரனாரின் 137ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அமைச்சர் க. பாண்டியராஜன் ,ஊரக தொழில்த் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் அவரது திருவுருச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தேமுதிக வரும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமென்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவெடுப்பார். எனக்கு தெரிந்து அண்ணா அறிவாலயத்தில் இதுவரை தேசிய கொடி ஏற்றியதாக நினைவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்த புரிதல் இல்லாமல் தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.
எஸ்வி.சேகர் மீது நடவடிக்கை மேற்கொண்டது போல், அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. நீட் தேர்வு நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்பதே அரசின் விருப்பம். ஸ்டாலின் காமாலை கண்களுடன் கரோனா தொற்று எண்ணிக்கையை பார்த்து வருகிறார். நல்ல கண்களில் பார்த்தால் குறைத்து தெரியும். உதயநிதி ஸ்டாலின் விநாயகர் சிலையை பதிவிட்டது போலித்தனதின் உச்சம்.
திமுக கடவுள் நம்பிக்கைக்கைக்கு எதிரான கட்சி. தற்போது விநாயகர் சிலை விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். கட்சியிலும் மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் இதற்கு விளக்கமளிக்கிறார்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: நோ அரியர்... அரியர் வைத்திருந்தால், ஆல் பாஸ் - முதலமைச்சர் அதிரடி!