சென்னை ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்டதிருவேற்காடு பகுதியில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிகார் மாநிலத்தில் எந்த நாளில் தேர்தல் நடக்க வேண்டுமோ அந்த நாளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே 23ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும். இன்னும் எட்டு மாதத்திற்குள் கரோனா இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்.
தேர்தல் தள்ளிவைப்பதற்கான எந்த சாத்தியக்கூறுகள் இல்லை என நான் நினைக்கிறேன். கண்டிப்பாக தேர்தல் நடக்கும் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி மலர்ந்தது என்ற செய்தி தெரியும்" என்றார்.
பாடகர் எஸ்பிபி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நிழல்கள் படத்தில் இடம்பெற்ற, 'இது ஒரு பொன்மலை பொழுது' எனும் பாடலை பாடி அவரது நினைவினை பகிர்ந்துகொண்டார்.
நான்கு தலைமுறைகளுக்கான பாடல்களை பாடியுள்ளார். அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் விதைக்கப்பட்டிருப்பது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எங்களுக்கு பெருமை தரக்கூடிய விஷயமாக கருதுகிறோம் எனக் கூறினார்.
இதையும் படிங்க: 78 குண்டுகள் முழங்க பாடும் நிலா பாலுவின் உடல் நல்லடக்கம்