ETV Bharat / state

கீழடிக்காக டெல்லி விரையும் அமைச்சர்  - முக்கிய பிரமுகர்களை சந்திக்க திட்டம்! - கீழடிக்காக டெல்லி செல்லும் அமைச்சர்

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கீழடி குறித்து மத்திய அமைச்சர்களை சந்திக்க இன்று டெல்லி செல்ல உள்ளார்.

pandiarajan
author img

By

Published : Sep 22, 2019, 7:21 PM IST

கீழடியில் நான்கு கட்டங்களாக நடைபெற்ற ஆராய்ச்சி முடிவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழினம் இருந்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது. கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களில் டெல்லியில் உள்ள UNESCO அரங்கில் நடைபெற உள்ள மூன்றாவது பன்னாட்டு திருக்குறள் மாநாட்டினை தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்காக இன்று டெல்லி புறப்படும் அமைச்சர், நாளை திருக்குறள் மாநாட்டில் உரையாற்ற உள்ளார். தொடர்ந்து, அன்று பிற்பகல் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய கலாசாரத் துறைச் செயலர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மொழிகளுக்கான செயலர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டின் தொல்லியல் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த தமிழரின் தொன்மையை உணர்த்தும் சின்னங்கள் குறித்தும் அதைக் காட்சிப்படுத்த தேவையான சர்வதேச அருங்காட்சியகம் அமைப்பது குறித்தும் மத்திய அரசின் தொல்லியல் துறை உயர் அலுவலர்களை (Director General of ASI) சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அதுமட்டுமின்றி, 24ஆம் தேதி அன்று சென்னை அருங்காட்சியகத்தை உலக அளவில் மேம்படுத்துவது குறித்து மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், அருங்காட்சியகங்களில் முதன்மை நிர்வாக அலுவலர்களையும் சந்தித்து பேசவுள்ளார்.

அமைச்சருடன் தமிழ்நாட்டின் சுற்றுலா பண்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் அபூர்வ வர்மா, தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத்தின் ஆணையர் உதயச்சந்திரன் மற்றும் உதவி இயக்குநர் சேகர் ஆகியோர் உடன் செல்கின்றனர்.

Intro:Body:கீழடி காக டெல்லி விரையும் அமைச்சர் பாண்டியராஜன்

தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் கீழடி குறித்து மத்திய அமைச்சர்களை சந்திக்க இன்று டெல்லி செல்ல உள்ளார்.

கீழடியில் நான்கு கட்ட ஆராய்ச்சி முடிவில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழினம் இருந்துள்ளது என்பதை விளக்கியுள்ளது. கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களில் புதுடெல்லியில் உள்ள UNESCO அரங்கில் நடைபெற உள்ள மூன்றாவது பன்னாட்டு திருக்குறள் மாநாட்டினை துவக்கி வைக்க உள்ளார்.

இதற்காக இன்று டெல்லி புறப்படும் அமைச்சர் நாளை திருக்குறள் மாநாட்டில் உரையாற்ற உள்ளர். தொடர்ந்து அன்று பிற்பகல் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொகரியால், மத்திய கலாச்சாரத்துறை செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மொழிகளுக்கான செயலாளர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் தொல்லியல் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்த தமிழரின் தொன்மையை உணர்த்தும் சின்னங்கள் குறித்தும் அதை காட்சி படுத்த தேவையான சர்வதேச அருங்காட்சியகம் அமைப்பது குறித்தும் மத்திய அரசின் தொல்லியல் துறை உயர் அலுவலர்களை (Director General of ASI) சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மேலும் 24 ஆம் தேதி அன்று சென்னை அருங்காட்சியகத்தை உலக அளவில் மேம்படுத்துவது குறித்து மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், அருங்காட்சியகங்களில் முதன்மை நிர்வாக அலுவலர்களையும் சந்தித்து பேசவுள்ளார். அமைச்சருடன் தமிழகத்தின் சுற்றுலா பண்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத்தின் ஆணையர் உதயச்சந்திரன் மற்றும் உதவி இயக்குனர்
சேகர் ஆகியோர் உடன் செல்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.