ETV Bharat / state

நீர்ப்பாசன திட்டம்: அறிக்கைத் தாக்கல் அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவு! - Minister of Water ResourcesMinister of Water Resources duraimurugan meeting wit govt officers

சென்னை: நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து கோவை, சென்னை மண்டல உள்பட 16 மாவட்ட அலுவலர்களுடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

duraimurugan
அமைச்சர் துரைமுருகன்
author img

By

Published : May 25, 2021, 2:19 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (மே.25) 16 மாவட்ட அலுவலர்களுடன் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். முன்னதாக, நேற்று(மே.24) மதுரை மண்டலத்திற்குட்பட்ட 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், அத்திக்கடவு அவினாசி நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல், குடிநீர் வழங்கும் திட்டம், மேட்டூர் அணை உபரி நீரை நீரேற்றம் மூலம் சரபங்கா வடிநிலப் பகுதியில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டம், நொய்யல் உப வடிநிலத் திட்டம், விழுப்புரத்தில் கழுவேலி ஏரியை மீட்டெடுக்கும் திட்டம், செங்கல்பட்டில் கொளவாய் ஏரியினை மீட்டெடுக்கும் திட்டம் உள்ளிட்ட பல பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், பல ஆண்டுகளாகச் செயல்படாமல் இருக்கும் நீர் நிலைகளுக்கு முன்னுரிமை வழங்கி, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பருவமழை காலங்களில் வெள்ள நீரை வீணாக்காமல் பயன்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.