ETV Bharat / state

அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் - அமைச்சர் முத்துசாமி

அயனாவரத்தில் ரூ.86.31 கோடி செலவில் 216 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்பன உள்ளிட்ட 30 புதிய அறிவிப்புகளை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ளார்.

அயனாவரத்தில் 216 அடுக்குமாடி குடியிருப்பு

author img

By

Published : Sep 1, 2021, 4:33 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில், "சென்னை பாடி குப்பம் பகுதியில் ரூ.62.77 கோடி மதிப்பீட்டில் 155 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். சென்னை அயனாவரத்தில் ரூ.86.31 கோடி செலவில் 216 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

ஈரோடு மாவட்டம் சம்பத் நகர் மற்றும் பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.40.60 கோடி மதிப்பீட்டில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மனைகள் மேம்படுத்தப்படும்.

சென்னை அம்பத்தூரில் ரூ.8.87 கோடி மதிப்பீட்டில் 151 மனைகள் மேம்படுத்தப்படும். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் 306 மனைகள் மேம்படுத்தப்படும். சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரூ.4 கோடி மதிப்பில் 82 மனைகள் மேம்படுத்தப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் 54 மனைகள் மேம்படுத்தப்படும். மதுரை மாவட்டம் தத்தநேரியில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் 119 மனைகள் மேம்படுத்தப்படும். பொதுமக்களின் தேவைக்கேற்ப பிரதான இடங்களில் வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.25 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் கட்டப்படும். மதுரை மாவட்டம் தோப்பூர் கிராமத்தில் ரூ.23.20 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்படும். சென்னை மாவட்டம் லாயிட்ஸ் காலனியில் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் ரூ.451 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

குத்தகை ஒப்பந்தம் மற்றும் விற்பனை பத்திரம் ஆகியவை தமிழில் வழங்கப்படும். மூன்றாம் தரப்பு கண்காணிப்பு குழு மூலம் வீட்டு வசதி வாரிய கட்டடங்களில் உறுதித் தன்மையை தணிக்கை செய்து உறுதிப்படுத்தப்படும். வாரிய பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். வீடு வாங்குபவர்களின் பொருளாதார அழுத்தத்தை குறைக்கும் வகையில் தவணை முறைத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் வட்டம் மடிப்பாக்கத்தில் உள்ள கார்த்திகேயபுரம் கூட்டுறவு சங்கத்தின் சமுதாய நலக் கூடத்தில் மின்தூக்கி குளிர்சாதன வசதி மற்றும் இதர நவீன வசதிகளுடன் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காட்பாடி கூட்டுறவு நகர் அமைப்பு சங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் 24 கடைகள் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

நகர் ஊரமைப்பு இயக்ககம்

சோளிங்கர், வடலூர், திருக்கோவிலூர் மற்றும் கூடலூர் ஆகிய நகரங்களுக்கு முழுமை திட்டங்கள் தயாரிக்கப்படும். மயிலாடுதுறையில் புதிய மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம் உருவாக்கப்படும். 18 மாவட்டங்களில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் சொந்த அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் ஒற்றைச்சாளர அனுமதி திட்ட கண்காணிப்பு மூலம் மின் ஒப்பந்தப்புள்ளி நில பதிவுகள் மற்றும் சொத்து மேலாண்மையை மின் இலக்க மயமாக்குதல் போன்ற மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப சேவைகள் ரூ.4 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

பழைய மகாபலிபுரம் சாலை கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் ரூ.180 கோடி செலவில் உயர் மட்ட சுழற்சாலை அமைக்கப்படும்.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி அங்காடி வளாகத்தில் பொருத்தமான போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகள் ரூ.20 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். மீஞ்சூர் முதல் வண்டலூர் வரையிலான வெளிவட்ட சாலையையொட்டி அமைந்துள்ள நிலத்தில் ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இதையும் படிங்க: அரசு வேலை - மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.