ETV Bharat / state

கடந்த ஆண்டைவிட பதிவுத்துறையில் ரூ.2,488 கோடி வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளது - அமைச்சர் பி.மூர்த்தி - வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளது

கடந்த ஆண்டைவிட பதிவுத்துறையில் ரூ. 2,488 கோடி வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டு வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் வசூல் சாதனைப் படைத்துள்ளது என வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டைவிட பதிவுத்துறையில்  ரூபாய் 2,488 கோடி வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளது - அமைச்சர் பி. மூர்த்தி

author img

By

Published : Oct 3, 2022, 9:55 PM IST

சென்னை: வணிக வரித்துறையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளைத்தொடர்ந்து வரி வருவாய் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

1.4.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வரி வருவாய் ரூ.66,161 கோடி ஆகும். இது கடந்த ஆண்டில் இதே நாள் வரை வசூலிக்கப்பட்ட ரூ. 47,873 கோடியை விட ரூ. 18,288 கோடி அதிகமாகும்.

வணிகவரி வசூலில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது. இதைப்போலவே பதிவுத்துறையிலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாக இதுவரை இல்லாத அளவில் வசூல் சாதனை எட்டப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும் வசூல் ரூபாய் 1,610 கோடியைத் தாண்டியுள்ளது.

1.4.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் பதிவான ஆவணங்களின் எண்ணிக்கை 17,56,977 ஆகும். வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூபாய் 8,696 கோடி ஆகும். கடந்த ஆண்டில், அதாவது 30.9.2021 வரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூபாய் 6,208 கோடி என்ற நிலையில் கடந்த ஆண்டைவிட பதிவுத்துறையில் ரூ.2,488 கோடி வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வகையில் வணிகவரித்துறையும் பதிவுத்துறையும் சேர்ந்து கடந்த ஆண்டைவிட ரூ. 20,776 கோடி அதிகமாக வசூலித்து சாதனைப் படைத்துள்ளன என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமணத்தைப் பற்றி பேசியதில் என்ன தவறு?’ - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.