சென்னை: இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குத் தகவல் தெரிவித்த தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், "வெளிநாட்டு மரங்களான சீமைக் கருவேல மரங்கள், தைல மரங்கள் ஆகியவற்றால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுகிறது.
அதை அகற்றுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. நாட்டு மரங்கள் வளர்ப்பதை அரசு வருங்காலங்களில் ஊக்குவிக்கும். சாயப்பட்டறைக் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதைத் தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.
தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்துவதைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படவுள்ளது.
நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மக்காச்சோளத்திலிருந்து பைகள் தயாரிக்க ஊக்கப்படுத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக்: தமிழ்நாடு வீரர்களுக்கு கரோனா இல்லை - அமைச்சர் மெய்யநாதன்