ETV Bharat / state

திரு.வி.க நகர் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: விளையாட்டுத் துறை அமைச்சர் - மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022

சட்டப்பேரவையில் திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட ஜமாலியா பகுதியில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்த்தி வருகிறார் என விளையாட்டுதுறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்த்தி வருகிறார்  OR  திரு.வி.க நகர் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: விளையாட்டு துறை அமைச்சர்

author img

By

Published : Mar 23, 2022, 3:24 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த 18ஆம் தேதி நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதனையடுத்து, (மார்ச் 21) முதல் மூன்று நாள்களுக்கு, நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீதான விவாதம் தொடங்கியது.

இதனையடுத்து, சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திரு.வி.க நகர் சட்டப்பேரவை திமுக உறுப்பினர் தாயகம் கவி, "திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜமாலியா பள்ளியின் அருகில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அரசு முன்வருமா’’ எனக் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்

இதனையடுத்து, தாயகம் கவி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், "திரு.வி.க நகர் ஜமாலியா பள்ளியின் அருகில் உள்ள சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை’’ எனத் தெரிவித்தார்.

விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்த்தி வருகிறார்

மேலும், விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்த்தி வருகிறார். சர்வதேச செஸ் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. உலகில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள இந்தப் போட்டிகளை உலகே திரும்பிப் பார்க்க உள்ளது. சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்கள் சென்னையில் 5 உள்ளன" என்றார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022
செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022

தொடர்ந்து பேசிய அவர், ''ஜமாலியா பள்ளிக்கு அருகில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் மாநகராட்சி அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொண்டோம். சென்னை மாநகராட்சி தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், அங்கு கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழ்நாடு அரசு, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு இணைந்து நடத்தும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்தில் ஜூலை 26ஆம் தேதி நடத்துகிறது. நடந்துகொண்டிருக்கும் போர்ச்சூழ்நிலை காரணமாக செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை ரஷ்யாவிலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்த பிறகு, பல நாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சித்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியினால், தமிழ்நாடு அரசின் அனைத்து மட்ட அதிகாரிகள் மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்புக் குழு ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்வு சாத்தியமானது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியினால்,  சர்வதேச செஸ் போட்டியை தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது

சரியாக 10 நாட்களுக்குள், ஏலம் கோருவதற்கான கோரிக்கையுடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முதலமைச்சர் அலுவலகத்தை அணுகிய சில மணிநேரங்களில் அனைத்து ஒப்புதல்களையும் தமிழ்நாடு அரசு உடனே வழங்கியது. இப்போட்டி இந்தியாவில் நடைபெற இருப்பதால் பல அணிகள் இந்தியாவின் சார்பில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பும் அமையும்.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022

தமிழ்நாடு அரசு எப்போதும் செஸ் விளையாட்டிற்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்து வருகிறது. பள்ளிகளில் சதுரங்கத்தை ஊக்குவித்தல், சதுரங்கப் போட்டிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், செஸ் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் என பல்வேறு வழிகளில் சதுரங்க விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது.

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி

இதுபோன்ற ஊக்குவிப்பு காரணமாக இந்தியாவின் 73 கிராண்ட் மாஸ்டர்களில் பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன், ஸ்ரீநாத் மற்றும் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் போன்ற கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளனர். இன்னும் எதிர்காலத்தில் அதிகமான கிராண்ட் மாஸ்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் உத்தேசமாக 26 ஜூலை 2022 முதல் ஆகஸ்ட் 8, 2022 வரை சென்னையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு இலவச இடம்... சென்னை பல்கலை...

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.