கரோனா தொற்றினால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலையில், மக்கள் மத்தியில் பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று 'மீண்டு எழுவோம்' என்ற விழிப்புணர்வு பாடலைத் தயாரித்துள்ளனர். இந்த விழிப்புணர்வு பாடல் பின்னணி பாடகர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பாடல் கரோனா தடுப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரை கௌரவிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பாண்டியராஜன் இன்று ஆவடியிலுள்ள தனது சட்டப்பேரவை அலுவலகத்தில் வைத்து இந்தப் பாடலை வெளியிட்டார். இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதை ஊக்குவிக்கும் வகையில் அரசு 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கிவருவதாகவும் அரசு இந்த முயற்சிகளை நிச்சயம் கௌரவிக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு எந்த பணியும் செய்யவில்லை - எம்எல்ஏவிடம் வாக்குவாதம்