ETV Bharat / state

'மருத்துவப்பணியாளர்களை பணியமர்த்தும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் முடியும்' - அமைச்சர் மா.சு

'மருத்துவர்கள் உள்ளிட்ட 4,308 மருத்துவப்பணியாளர்களை பணியமர்த்தும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்' என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ காப்பீட்டு திட்டம் பெற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர்

author img

By

Published : Aug 5, 2022, 5:46 PM IST

சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள அரசு மனநல காப்பகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் புதிய காப்பீடு அட்டைகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

மேலும், போதை மாத்திரை பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்டெடுக்கும் ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மையத்தையும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றி அன்பழகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “1794ஆம் ஆண்டு முதல் மன நோயாளிகளுக்கு புகலிடமாக தொடங்கப்பட்ட கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகம் அமைப்பு 228 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தினசரி 350 புறநோயாளிகள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுபோல் 43 இடங்களில் அரசு மனநல காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதார், வருமானச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலேயே காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் இன்று (ஆக. 05) 520 பேருக்கு காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதில், 311 ஆண்கள், 209 பெண்கள் அடங்குவர். அத்தோடு தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கர்நாடகாவில் உள்ள NIMHANS போல இத்திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தை தரம் உயர்த்த 40 கோடி செலவில் கட்டடம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒப்பியாயிட் மாற்று சிகிச்சை திட்டம் இன்று (ஆக. 05) கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.400 பேர் பதிவு செய்துள்ளனர். இந்தத்திட்டம் மூலம் போதை மாத்திரை பழக்கத்திற்கு ஆளானவர்கள் சிகிச்சைப்பெறுவார்கள். மருத்துவர்கள் உள்ளிட்ட 4,308 மருத்துவப்பணியாளர்களை பணியமர்த்தும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.43.50 கோடி மதிப்பில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.