ETV Bharat / state

மதுரையில் இரு கர்ப்பிணிகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் - Madurai Rajaji Govt Hospital

Death of Pregnant Women in Madurai GH: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணிகள் உயிரிழப்புக்கு 'மாரடைப்பு தான் காரணம்' என மருத்துவ அறிக்கை வந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 8:59 PM IST

மதுரையில் கர்ப்பிணிகள் உயிரிழப்புக்கு காரணம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் வருடத்தில் 10 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகிறது எனவும், 2021-2022-ல் 1 லட்சம் பிரசவங்களில் தாய் மரணம் 90 என்ற நிலை மாறி, தற்போது 52 ஆக குறைந்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், வரும் காலங்களில் பிரசவத்தின் போது, தாய் மரணத்தை ஒற்றை இலக்கத்தில் குறைக்க சிங்கப்பூர் நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும் பயிற்சி உதவியாக இருக்கும் எனவும் கூறினார்.

தமிழ்நாட்டில் தாய், சேய் நல மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக சிங்கப்பூர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் என்ற சிங்கப்பூர் அமைப்புடன் இணைந்து இரண்டாம் கட்ட பயிற்சி திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.5) தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் சிங்கப்பூர் துணை தூதர் எக்டர் பங் பங்கேற்றார். இதற்கான ஒப்பந்தம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் கையெழுத்தானது.

இரண்டு ஆண்டுகள் இந்த பயிற்சியை சிங்கப்பூரை சேர்ந்த மகப்பேறு மருத்துவர்கள் தமிழ்நாடு மருத்துவர்களுக்கு வழங்க உள்ளனர். இந்த பயிற்சியின் மூலம் தமிழ்நாட்டில் மகப்பேறு கால தாய் மற்றும் சேய் இறப்பை குறைக்க முடியும். ஆண்டிற்கு 144 மகப்பேறு பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகின்றது. அவர்கள் மூலமாக தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு சர்வதேச அமைப்புகளின் கட்டமைப்புகளைவிட கூடுதலாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் புற்றுநோய்க்கு ரோபோடிக் சிகிச்சை இயந்திரம் ரூ.34 கோடியில் தமிழ்நாட்டில் உள்ளது.

வேறு எந்த இந்திய அரசு மருத்துவமனையில் இல்லாத டபுள் பலூன் எண்டோஸ்கோபி தமிழ்நாட்டில்தான் உள்ளது. அதே போன்று, ஆட்டோமெட்டிக் எம்.ஆர்.ஐ தமிழ்நாட்டில்தான் உள்ளது. அதிநவீன மருத்துவ சாதனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அதோ போன்று, வெளிநாட்டு சிகிச்சைகள் தமிழ்நாட்டில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதோடு; பல்வேறு நாடுகளை சேர்ந்த பலதுறைகளில் சிறந்து விளங்கும் மருத்துவர்களை அழைத்து வந்து கருத்தரங்கு நடத்த உள்ளோம்' என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 'உலக அளவிலான மருத்துவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில் தாய் சேய் நல மருத்துவத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இந்த பயிற்சியின் மூலம் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு, அவசர மகப்பேறு உயிரிழப்பை குறைக்க முடியும். தமிழ்நாட்டில் ஆண்டிற்கு 10 லட்சம் கர்ப்பிணிகள் பதிவு செய்கின்றனர். அதில் 55 சதவீதம் சுக பிரசவமாகவும், 45 சதவீதம் அறுவை சிகிச்சை மூலமாகவும் பிறக்கின்றனர். அதில், மேலும் 5 லட்சத்து 40 ஆயிரம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.

தாய் சேய் மரணங்கள் கடந்த இரண்டு ஆண்டில் வெகுவாக குறைந்துள்ளது. 2021-2022 ஒரு லட்சம் பிரசவத்தில் 90 தாய் மரணம், தற்போது அது 52 இறப்பாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில், டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இதுவரை 4,703 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 420 பேர் மருத்துவமனையில் சிகிச்சை உள்ளனர். கடந்த ஆண்டுகளை காட்டிலும் நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணிகள் இறப்பிற்கு காரணம்: மேலும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இரண்டு கர்ப்பிணிகள் உயிரிழப்பிற்கு, மாரடைப்பு தான் காரணம் என மருத்துவ அறிக்கையில் வந்துள்ளது. அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையத்தை சேர்ந்த மருத்துவரிடையே பிரச்சினைகள் உள்ளது.போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் நாளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் உயிரிழப்பில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.