ETV Bharat / state

சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவிற்கு இரண்டாவது முறையாக விளக்கம் அளிக்கப்பட்டும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Apr 18, 2023, 7:03 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று (ஏப்ரல் 18) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த 2021ஆம் ஆண்டு சித்த மருத்துவ பல்கலைக்கழத்திற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்ட நிலையில், பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், 4 மாதங்கள் கிடப்பில் போட்டுவிட்டு, மசோதா தொடர்பாக முதல்முறை விளக்கம் கேட்ட நிலையில், விளக்கம் கொடுக்கப்பட்டது. தற்போது, இரண்டாவது முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா மீது ஆளுநர் விளக்கம் கேட்டு உள்ளார்.

தொடர்ந்து, இரண்டாவது முறையாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநருக்கும், சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையோ தெரியவில்லை. சித்த மருத்துவப் பல்கலைகழக மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். எனவே, மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஜெய்பீம்' பட பாணியில் மீண்டும் ஓர் கொடூரம்.. கண்ணீர் வடிக்கும் இருளர் இன மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.