ETV Bharat / state

திமுக பல கூறுகளாக உடையும் - அமைச்சர் க. பாண்டியராஜன்

சென்னை: திமுக பல கூறுகளாக உடைய தொடங்கிவிட்டது என்றும் மு.க அழகிரியின் விளைவு போக போக தெரியும் என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

pongal gift to pandiarajan
pongal gift to pandiarajan
author img

By

Published : Jan 4, 2021, 5:40 PM IST

Updated : Jan 4, 2021, 10:23 PM IST

தமிழ்நாட்டில் இன்று (ஜன.4) முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2ஆயிரத்து 500 ரூபாயுடன், தொகுப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அதன் தொடர்ச்சியாக சென்னை திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.

திமுக பல கூறுகளாக உடையும்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொங்கல் பரிசு தொகுப்பு தரக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக உடைந்துவிட்டது மதுரையில் மு.க. அழகிரி தலைமையில் கூடிய கூட்டத்தில் தெரிந்தது. இதன் விளைவு போக போக தெரியும்.

ஸ்டாலின் அதிமுக அரசை குறை சொல்லி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டால் அவர்களுக்கு இருக்கின்ற வாக்குகளும் போய்விடும். மு.க. அழகிரியின் நிலைப்பாடு என்ன என்பது போக, போகத் தெரியும்" என்றார்.

இதையும் படிங்க: மநீம கட்சிக்கு சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

Last Updated : Jan 4, 2021, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.